azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Duryodhana symbolises one who has wicked thoughts. His minister was Dushasana. Dushasana represents one who promulgates bad laws. The combination of these two led to the growth of greed. On account of unrestricted growth of greed (lobha), Kauravas were totally destroyed. On another occasion Lord Krishna said, Arjuna means a person whose heart is pure and immaculate. Lord Krishna clarified to Arjuna in the battlefield, “Destiny is all powerful. Justice always wins. Selfishness will end in ruin. This is the law of the Universe (Yuga Dharma). He further explained to Arjuna that greed of Kauravas will cause them ruin.” Kauravas were not prepared to give their rightful share to the Pandavas. They wanted to keep everything to themselves, including what belongs to others. This selfishness is called greed. (My Dear Students, Vol 2, Ch 17, 'Lessons from the Immortal Indian Epics'.)
துரியோதனன் தீய எண்ணங்கள் கொண்ட ஒருவானகத் திகழ்ந்தான்.அவனது மந்திரி துச்சாதனன். தீய சட்டங்களை இயற்றும் ஒருவனாகத் திகழ்ந்தவன் துச்சாதனன். இந்த இருவரும் சேர்ந்த இணைப்பு பேராசைக்கு இட்டுச் சென்றது. கட்டுக்கடங்காத பேராசை பெருகியதன் காரணமாக, கௌரவர்கள் முழுவதுமாக அழிக்கப் பட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ''அர்ஜூனன் என்றால் தூய மற்றும் மாசற்ற இதயம் கொண்ட ஒருவன் என்று பொருள்'' என்று கூறினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, '' விதி அனைத்து வலிமையும் வாய்ந்தது. நீதியே எப்போதும் வெல்லும்.சுயநலம் அழிவில் தான் முடியும். இதுவே யுக தர்மம் '' என்று விளக்கினார்.அவர் மேலும் அர்ஜூனக்கு, '' கௌரவர்களின் பேராசை அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும்'' என்று விவரித்தார்.கௌரவர்கள், பாண்டவர்களுக்கு அவர்களுக்கே உரித்த பங்கைக் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் அனைத்தையும், மற்றவர்களுக்குச் சொந்தமாவற்றையும் சேர்த்துத் தாங்களே வைத்துக் கொள்ள விரும்பினார்கள்.இந்த சுயநலமே பேராசை எனப்படுகிறது.