azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as you prescribe minimum qualifications for any profession, the minimum qualification for grace is surrender of egoism, control over senses, and regulated food and recreation (ahaaraandvihaara). You are made or marred by the company you keep. A bad person who falls into good company is able to shed his evil quickly and shine forth in virtue. A good person falling into evil company is overcome by the subtle influence and quickly slides down into evil. Reading that Krishna advises in the Gita the giving up of all individual responsibilities (Dharmas), an enthusiastic devotee gave up all obligations and limits; but he had to be told that one obligation still remained if the grace of God had to be secured:maam ekam sharanam vraja- "Surrender to Me only". When that surrender is complete and all acts, words and thoughts are dedicated to Him, along with all their consequences, then the Lord has promised that He will free you from sin and sorrow(Divine Discourse, Sep 27, 1965.
Adhere to right conduct and observe purity in thought, word and deed.
You will secure the grace of God. - Baba
எந்த ஒரு தொழிலுக்கும் எவ்வாறு ஒரு குறைந்த பட்ச தகுதியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அவ்வாறே இறை அருளைப் பெறுவதற்கான குறைந்த பட்ச தகுதி, அஹங்காரத்தை விட்டு விடுவதும்,புலனடக்கம்,உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ( ஆஹார, வ்யவகாரங்களில் ) கட்டுப்பாடும் தான். நீங்கள் உயர்வதோ அல்லது தாழ்வதோ, நீங்கள் வைத்திருக்கும் நட்பு வட்டத்தினால் தான். நல்லவர் கூட்டத்தில் சேர்ந்து விட்ட ஒரு கெட்ட மனிதன்,விரைவாகத் தனது தீய பண்புகளைக் களைந்து விட்டு, நற்குணங்களுடன் பிரகாசிக்க முடிகிறது. தீயவர் குழுவில் சேர்ந்து விட்ட ஒரு நல்ல மனிதன் அதன் சூக்ஷமமான தாக்கத்தால் கவரப்பட்டு, விரைவாகத் தீயவற்றில் சறுக்கி விழுந்து விடுகிறான்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில் உன்னுடைய எல்லா (தர்மங்கள்)கடமைகளையும் விட்டு விடு என்று கூறுவதை மட்டும் படித்து விட்டு, ஒரு ஆர்வமுள்ள பக்தர் தனது தர்மங்கள் மற்றும் வரம்புகளை எல்லாம் விட்டு விட்டாராம்; ஆனால், அவருக்கு இறைவனது அருளைப் பெறுவதற்கு இன்னும் ஒரு கடமை பாக்கி இருக்கிறது என்பதை நினைவு படுத்த வேண்டி வந்தது- அதுவே, '' மாமேகம் சரணம் வ்ரஜ'' - என்னிடம் மட்டுமே சரணம் அடைந்து விடு என்பதாகும். எப்போது ஸரணாகதி பரிபூரணமாகி, அனைத்து எண்ணம்,சொல் மற்றும் செயல்களும் அவற்றின் விளைவுகளுடன் கூடவே அவனுக்கு அர்ப்பணிக்கப் படுகிறதோ, பின்னர் இறைவன் உங்களை பாவம் மற்றும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறேன் என்று உறுதி அளிக்கிறான்.
தர்மத்தின் பால் ஒழுகி,எண்ணம், சொல் மற்றும் செயலில் தூய்மையைக் கடைப் பிடியுங்கள்.இறை அருளை நீங்கள் பெறுவீர்கள் -பாபா