azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All are God's children. Hence all of you should live as embodiments of Love and like brothers and sisters, loving and serving. People keep a distance as long as they do not understand the power of love. Once they understand and experience love, they will become one. You will be able to realise this truth sooner or later. When a plant bears flowers, not all the flowers blossom at the same time. Some are in the process of blossoming, some are fully blossomed, yet others will be only in the bud stage. Only the fully bloomed flower spreads its fragrance. Similarly people will also be in different stages of evolution - some are like the bud; some are at a blossoming stage; and some others are like the fully bloomed flower, spreading their fragrance. Wait patiently till the stage of fragrance arrives. (Divine Discourse, Oct 27, 2006.)
அனைவரும் ஆண்டவனின் குழந்தைகளே. எனவே, நீங்கள் அனைவரும் அன்பின் திரு உருவங்களாக,சகோதர, சகோதரிகளைப் போல அன்பு செலுத்தியும்,சேவை ஆற்றியும் வாழ வேண்டும்.அன்பின் ஆற்றல் அவர்களுக்குப் புரியாதவரை மக்கள் தூர விலகி இருக்கிறார்கள்.ஒருமுறை அன்பினைப் புரிந்து கொண்டு அனுபவித்து விட்டால், அவர்கள் ஒன்றாகி விடுவார்கள். இந்த உண்மையை ஒருநாள் இல்லை ஒருநாள் உங்களாலும் உணர்ந்து கொள்ள முடியும்.ஒரு செடியில் பூக்கள் மலரும் போது அனைத்து பூக்களும் ஒரே நேரத்தில் மலருவதில்லை.சில மலர்ந்து கொண்டு இருக்கும், சில முழுமையாக மலர்ந்திருக்கும், மேலும் சில மொட்டுக்களாகத் தான் இருக்கும். முழுவதுமாக மலர்ந்த பூ மட்டுமே தன் நறுமணத்தைப் பரப்பும். அதைப் போலவே மனிதர்களும் பரிணாம வளர்ச்சியின் பல நிலைகளில் இருப்பார்கள்-சிலர் மொட்டுக்கைளப் போலவும், சிலர் மலர்ந்து கொண்டும், மேலும் சிலர் முழுமையாக மலர்ந்து தங்கள் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டும் இருப்பார்கள். நறுமண நிலை வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள்.