azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who struggle to uphold Truth are the real devotees. The essence of all scriptures (Vedas) lies in establishing this truth. Unfortunately, today people who recognize such an eternal truth are not to be found anywhere. You must never forsake Truth. When truth (Sathya) and righteousness (dharma) come together, there will be peace (Shanthi) and Love (Prema). In fact, Truth (Sathya) is the basis for all other human values, namely, Righteousness, Peace, Love, and Non-Violence (Dharma, Shanthi, Prema,andAhimsa). Love (Prema) does not descend from outside. It emerges only from within, from the hearts of people. No human being can live without love. True and real life is one that is suffused with love. All virtues merge in love. Where there is love, there will be unity that permeates all barriers. Where there is love, people regardless of caste, culture, and country will unite naturally.(Divine Discourse, 6 Mar 2008)
Your heart is like a vessel. Fill it with qualities of Truth, Love and Sacrifice. - Baba
சத்தியத்தைக் கடைப்பிடிக்கப் போராடுபவர்களே உண்மையான பக்தர்கள். அனைத்து வேதங்களின் சாரமும் இந்த சத்தியத்தை நிலைநாட்டுவதில் தான் உள்ளது.துரதிருஷ்ட வசமாக,இப்படிப் பட்ட நித்ய சத்தியத்தை உணர்ந்த மனிதர்களை இன்று எங்கேயும் காண முடிவதில்லை.நீங்கள் ஒரு போதும் சத்தியத்தைக் கைவிடக் கூடாது.எப்போது சத்தியமும், தர்மமும் ஒன்று சேருகிறதோ, அங்கு சாந்தியும்,ப்ரேமையும் இருக்கும். உண்மையில் சத்தியமே அனைத்து மனிதப் பண்புகளான தர்மம்,சாந்தி,ப்ரேமை மற்றும் அஹிம்சையின் ஆதாரமாகும்.ப்ரேமை என்பது வெளியிலிருந்து வந்து குதிப்பதல்ல. அது உள்ளிருந்து மட்டுமே,மனிதர்களின் இதயங்களிலிருந்தே வெளிப்படுகிறது.ஒரு மனிதனும் ப்ரேமை இன்றி வாழ முடியாது ப்ரேமை ததும்பும் வாழ்க்கையே,உண்மையான வாழ்க்கை.அனைத்து நற்குணங்களும் ப்ரேமையில் சங்கமமாகின்றன.எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு அனைத்து தடைகளையும் தாண்டிய ஒற்றுமை இருக்கும். எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு மக்கள் ஜாதி,மத, கலாசார,மற்றும் நாடு என்ற பேதங்களின்றி இயல்பாகவே இணைந்து இருப்பார்கள்.
உங்கள் இதயம் ஒரு பாத்திரம் போன்றது.அதை சத்தியம்,ப்ரேமை மற்றும் தியாகம் எனும் குணங்களால் நிரப்புங்கள் - பாபா