azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Goddess Durga confers abundant energy on the individual. Mother Lakshmi bestows various kinds of wealth like money, food, gold, and vehicles for movement, so you lead a happy life in this world. Mother Saraswathi blesses you with education and intellect. Hence everyone must worship the three Divine Mothers. In all this worship, practicing right conduct (dharma) is of utmost importance. You should also make proper use of your intellect and undertake only good, righteous and sacrificial actions at all times for the benefit of the society and sanctify your lives. People keep distance among one another due to differences of opinion. In fact, you are not different from others. Today they may appear to be different, but tomorrow they may come close to you. Hence all should live like brothers and sisters with love and unity. ‘All are one; be alike to everyone.’ This is my special message on this holy occasion ofNavarathri.(Divine Discourse, 9 Oct 2008)
துர்க்கா தேவி ஒருவருக்கு அளவற்ற சக்தியை அளிக்கிறாள்.லக்ஷ்மித் தாயாரோ பல விதமான செல்வங்களான பணம்,உணவு,செல்வதற்கு வாஹனங்கள், போன்றவற்றை, இந்த உலகில் நீங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவதற்காக அளிக்கிறாள்.ஸரஸ்வதித் தாயாரோ கல்வி மற்றும் புத்தியை அருளுகிறாள்.எனவே,ஒவ்வொருவரும் இந்த முப்பெருந்தேவியரை வழிபட வேண்டும்.இந்த வழிபாட்டில் எல்லாம், தர்மத்தை அனுசரிப்பது அத்தியாவசியம். நீங்களும் கூட உங்கள் புத்தியை சரியான வழியில் பயன்படுத்தி, எல்லாக் காலங்களிலும் நல்ல, தார்மீக மற்றும் தியாகமுள்ள செயல்களை சமுதாய நலனுக்காக ஆற்றி, உங்களது வாழ்க்கையை புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.கருத்து வேறுபாடுகளினால் மக்கள் ஒருவரை ஒருவர் விட்டு தூர விலகி இருக்கிறார்கள்.உண்மையில் நீங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை.இன்று அவர்கள் மாறுபட்டவர்களாகத் தோன்றலாம்,ஆனால், நாளை அவர்களே உங்களுடன் நெருங்கி வரக் கூடும்.எனவே, அனைவரும் சகோதர, சகோதரிகளைப் போல, ஒற்றுமை மற்றும் ப்ரேமையுடன் வாழ வேண்டும். '' அனைவரும் ஒன்றே. அனைவருடனும் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் '' இதுவே புனிதமான இந்த நவராத்தியில் எனது முக்கியமான அறிவுரையாகும்.