azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being is suffused with love. It is only for our convenience, for our pleasure, and our own selfish purposes that we develop certain worldly relationships. Give up selfishness and strive for self-realisation. You must enquire into yourself, “Who am I? Body, mind, intellect,chittha(memories) orahamkara(ego)?” You are none of these. You are yourself - “I am I.” Recognise this truth. One must render selfless service. The fruit of all actions must then be sacrificed. Only a person, who denounces the fruits of all actions, deserves to be called a Yogi (renunciant). A Yogi is not one who merely sits under a tree, closes one’s eyes and meditates. Real sacrifice involves giving up your desires. Do not be narrow-minded. If you are inflicted with narrow-mindedness your whole life will become narrow. Develop broad-mindedness and cultivate selfless love. (Divine Discourse, Sep 27, 2006)
Service expresses the Divinity hidden within. It broadens one's heart, destroys narrow-mindedness and gives delight. The evil qualities and tendencies in a person can be driven away through service. - Baba
ஒவ்வொரு மனிதனும் ப்ரேமையால் நிரம்பியவரே.நம்முடைய சௌகரியம், நம்முடைய சந்தோஷம் மற்றும் நம்முடைய சுயநல நோக்கங்களுக்காக மட்டுமே ,நாம் சில உலகியலான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். தன்னலத்தை விட்டு விட்டு, தன்னை உணர்வதை அடையப் பாடுபடுங்கள். நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், '' நான் யார்? உடலா, மனமா, புத்தியா, சித்தமா அல்லது அஹங்காரமா?'' என்று. நீங்கள் இது எதுவுமில்லை. நீங்கள் நீங்களே தான்,'' நான் - நானே'' -இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.ஒருவர் தன்னலமற்ற சேவை புரிய வேண்டும்.பின்னர் உங்களது செயல்களின் பலன்களையும் நீங்கள் தியாகம் செய்ய வேண்டும். அனைத்து செயல்களின் பலன்களையும் தியாகம் செய்பவர் மட்டுமே ''யோகி'' என அழைக்கத் தகுந்தவர். '' யோகி '' என்றால் மரத்தடியில் வெறுமனே உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டு, தியானம் செய்பவர் அல்ல. உண்மையான தியாகம் என்பது உங்களது ஆசைகளைத் துறப்பதே ஆகும். குறுகிய மனப்பாங்குடையவராக இருக்காதீர்கள். குறுகிய மனப்பாங்கு உடையவராக நீங்கள் இருந்தால், உங்களது வாழ்க்கை முழுவதுமே குறுகிப் போகும். விசாலமான மனப்பாங்கினை உருவாக்கிக் கொண்டு,தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சேவை உள்ளுறையும் தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறது. அது, ஒருவரது மனதை விசாலமாக்கி, குறுகிய மனப்பாங்கினை அழித்து,ஆனந்தம் அளிக்கிறது. ஒரு மனிதனுள் உள்ள தீய குணங்கள் மற்றும் இயல்புகளை சேவையின் மூலம் விரட்டி விடலாம்.-பாபா