azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The goal of celebrating the Dasara festival is to control the ten senses. Legend says that Goddess Chamundi killed the demon Mahisha during this occasion. The inner meaning of this story is that, under no circumstances, associate yourselves with demonic qualities. Always be in good company. If you join bad company, you will also become evil. Hence, never befriend a bad person. The moment you come across such people, just say ‘goodbye’ and move on. You need not develop hatred towards them. Whomever you come across, consider them as embodiments of Divinity and salute them. Even when you come across people who hate you, offer your salutations (pranams) to them and ask them, “How are you brother?” Then they too will respond in the same manner. A human being is one who is endowed with human values and also exhibits them. Always speak truth and observe righteousness (Dharma). Be peaceful. Be happy and blissful. (Divine Discourse, Sep 27, 2006)
தசராப் பண்டிகையைக் கொண்டாடுவதன் நோக்கம் பத்து புலன்களையும் கட்டுப் படுத்துவதே ஆகும்.புராணங்கள் தேவி சாமுண்டீஸ்வரி, அரக்கனான மஹிஷாசுரனை இந்தத் தருணத்தில் வதம் செய்தாள் என்று கூறுகின்றன. இந்தக் கதையின் உட்பொருள் என்னவென்றால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் அசுர குணங்களோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். எப்போதும் நல்லவர்களின் நட்பு வட்டத்திலேயே இருங்கள். தீயவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டால், நீங்களும் தீயவராக ஆகி விடுவீர்கள்.எனவே, ஒருபோதும் ஒரு தீய மனிதரின் நட்பை நாடாதீர்கள். இப்படிப் பட்ட மனிதர்களைக் கண்டவுடனேயே, '' குட்பை '' சொல்லி விட்டு அகன்று விடுங்கள். நீங்கள் அவர்கள் பால் வெறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்களும் தெய்வீகத்தின் உருவே எனக் கருதி, வணங்குங்கள். உங்களை வெறுப்பவர்களைச் சந்தித்தாலும் அவர்களை வணங்கி, '' நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் சகோதரரே?'' என்று விசாரியுங்கள். பின்னர் அவர்களும் அவ்வாறே பதில் கூறுவார்கள். மனிதப் பண்புகள் பொருந்தி இருப்பதும் கூடவே,அவற்றை வெளிப்படுத்துபனே ஒரு மனிதன்.எப்போதும் சத்தியத்தையே பேசுங்கள், தர்மத்தையே கடைப்பிடியுங்கள். சாந்தியுடன் இருங்கள். சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருங்கள்.