azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You are wasting your precious time thinking that all that you see in this objective world is true. No! None of these objects is real. Truth is eternal and is beyond the three periods of time - past, present and future. That Truth is Divinity. God is only one, now and forever. How foolish it is to think that the worldly vision which is subject to change from time to time is real. You are a student today. Tomorrow you will become an officer in an Organization and few years later you will be a retired officer. Then, which is true? Is it the life as a student or as an officer or as a retired official? Thus, all that you see in this objective world and all the relationships between individuals are only temporary, never real and permanent. Divinity is not like that. Recognise the Truth that the Divine is omnipresent - yesterday, today and tomorrow. (Divine Discourse, Sep 27, 2006.)
You are a fragment of the Divine. This is the greatest truth all of you must realize fully. - Baba
இந்த பொருட்களாலான உலகத்தில் நீங்கள் காண்பவை அனைத்தும் உண்மையானவை என்று எண்ணுவதிலேயே உங்களது அரிய நேரத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இல்லை ! இதில் எந்தப் பொருளும் உண்மையானவை அல்ல.சத்யம் என்பது நிரந்தரமானது - கடந்த, நிகழும் மற்றும் எதிர் என்ற மூன்று காலங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. அந்த சத்யமே தெய்வீகம்.இன்றும், எப்பொழுதும் இறைவன் ஒருவனே. கணத்திற்கு கணம் மாறும் உலகக் காட்சிகள் உண்மையானவை என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம். இன்று நீங்கள் ஒரு மாணவர்.நாளை நீங்கள் ஒரு நிறுவனத்தில் அதிகாரியாவீர்கள்; சில வருடங்களுக்குப் பின்னால், நீங்கள் ஓய்வு பெற்ற அதிகாரி ஆகி விடுவீர்கள்.அப்படி என்றால், இதில் எது உண்மை? மாணவ வாழ்க்கையா அல்லது ஒரு அதிகாரியா அல்லது ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியா?இவ்வாறு பொருட்களாலான இந்த உலகில் நீங்கள் காண்பவை அனைத்தும், மேலும் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளும் தாற்காலிகமானவையே, ஒருபோதும் உண்மையானவையோ அல்லது நிரந்தரமானவையோ அல்ல. தெய்வீகம் அப்படிப் பட்டதல்ல. நேற்று, இன்று மற்றும் நாளை என தெய்வீகம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தது என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தெய்வீகத்தின் ஒரு அங்கமே.நீங்கள் அனைவரும் முழுமையாக உணர வேண்டிய மகத்தான உண்மை இதுவே- பாபா