azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

People today repose their faith in the ephemeral and unreal world, and forget God who is the embodiment of truth. This is the root cause for all sorrows and difficulties faced by humanity. You say you are encountering difficulties. From where did they come? Difficulties are the consequences of one’s past deeds and thoughts. Everything in this world is susceptible to change. God is the only changeless principle. What is human life for, after all? Is it merely for eating, drinking, sleeping and ultimately dying? In doing so, can the human life be termed as sacred? At the time of birth everyone is pure and sacred. As they grow old, they gradually lose this purity. This is improper! One must always maintain one’s purity. Install the changeless and eternal God in the altar of your sacred heart and offer your love to Him. Thereby, you can experience bliss. This is the foremost duty of every human being. (Divine Discourse, Sep 27, 2006.)
The light of wisdom shines only in a pure heart. - Baba
இந்நாளில் மனிதர்கள் நிலையற்ற, மற்றும் போலியான இந்த உலகத்தின் மீது தங்களது நம்பிக்கையை வைத்து,சத்தியத்தின் உருவே ஆன இறைவனை மறந்து விடுகிறார்கள். மனித குலம் சந்திக்கும் அனைத்து கஷ்டங்களுக்கும், துயரங்களுக்கும் இதுவே அடிப்படைக் காரணம்.நீங்கள் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கூறுகிறீர்கள்.இவை எங்கிருந்து வந்தன? கஷ்டங்கள் ஒருவரது முந்தைய காரியங்கள் மற்றும் எண்ணங்களின் விளைவுகளே. இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் மாறுதலுக்கு உட்பட்டவையே. இறைவன் ஒருவனே மாறாத தத்துவம். மனித வாழ்க்கை என்பது எதற்காக?இது வெறும் உண்டு,குடித்து,உறங்கி , இறுதியில் மடிவதற்காக மட்டும் தானா? இவ்வாறு செய்வதனால், மனித வாழ்க்கை புனிதமானது என்று கூற முடியுமா?பிறப்பின் போது ஒவ்வொருவரும் தூய்மையான மற்றும் புனிதமானவர்களே. வயதாக ஆக, அவர்கள் படிப்படியாக இந்த தூய்மையை இழந்து விடுகிறார்கள்.இது சரியல்ல! ஒருவர் எப்போதும் தங்களது தூய்மையை அனுசரிக்க வேண்டும். மாறாத, என்றும் நிலையான இறைவனை உங்களது புனிதமான இதய பீடத்தில் பிரதிஷ்டை செய்து உங்களது ப்ரேமையை அவனுக்கு அர்ப்பணியுங்கள். இதன் மூலம் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். அதுவே ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.
தூய இதயத்தில் மட்டுமே ஞான ஒளி பிரகாசிக்கும் -பாபா