azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Once the saints Namadeva and Gyanadeva were travelling in a forest. They felt thirsty and searched for water and came across an old dried up well. Gyanadeva, who followed the path of wisdom, transformed himself into a bird and flew down, drank the water and returned. Namadeva saw this and didn’t agree with the approach. He thought that one must elevate oneself from this human birth to Divine and not the other way. So he sat at that spot and chanted the name of the Lord. Every time he did it with intensity, the level of water began to rise higher and higher and finally the well started overflowing. He comfortably drank the water and was blissful. He demonstrated clearly wisdom is useful but is not greater than Divinity. He clearly taught the precious lesson that the Name of the Lord will grant everything that one needs in life and ultimately the Divine Himself.(My Dear Students, Vol 3, Ch 13, Mar 16, 1998.)
Keep the name of the Lord always radiant on your tongue and mind; it will keep the antics of the mind under control. - Baba
ஒருமுறை முனிவர்களான நாமதேவரும்,ஞானதேவரும் ஒரு காட்டின் வழியாக சென்று கொண்டு இருந்தார்கள்.அவர்களுக்குத் தாகம் எடுக்கவே, தண்ணீரைத் தேடி அலைந்து , குறைவான நீர் உள்ள ஒரு பழைய வரண்ட கிணற்றைக் கண்டார்கள். ஞானமார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் ஞானதேவர் , தன்னை ஒரு பறவையாக மாற்றிக் கொண்டு,கீழே பறந்து சென்று, தண்ணீரைக் குடித்து விட்டு, திரும்பி வந்து விட்டார்.நாம தேவர் இதைக் கண்டார்;அவருக்கு இந்த முறையில் உடன்பாடு இல்லை.ஒருவர் தன்னை இந்த மனிதப் பிறவியிலிருந்தே இறை நிலைக்கு மேலே உயர்த்திக் கொள்ள வேண்டுமே அன்றி,மாறாக அல்ல என அவர் நினைத்தார்.எனவே, அவர் அந்த இடத்தில் அமர்ந்து,இறை நாமஸ்ரணை செய்தார்.ஒவ்வொரு முறையும் அவர் தீவிரமாக அதைச் செய்தவுடன் நீர் மட்டம் உயர்ந்து,உயர்ந்து இறுதியாக அந்தக் கிணறு நிரம்பி வழிய ஆரம்பித்தது.அவர் சௌகரியமாக நீரை அருந்தி ஆனந்தம் அடைந்தார். ஞானம் உபயோயாகமானது தான் என்றாலும்,அது இறைவனை விட உயர்ந்தது அல்ல என்பதை அவர் தெளிவாக எடுத்துக் காட்டினார். இறைவனது திருநாமம், ஒருவரது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அளித்து,இறுதியில் இறைவனேயே அளிக்கும் என்ற அரிய பாடத்தை அவர் தெளிவாகப் புகட்டினார்.
இறைவனது திருநாமத்தை எப்போதும் உங்களது நாவிலும்,மனதிலும் பிரகாசமாக வைத்திருங்கள்;அது உங்களது மனம் அலை பாய்வதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் - பாபா