azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The birth as a human being is sacred and precious. By indulging in selfishness, people undermine their birth and the Divinity within themselves. Leading a moral life alone can sanctify this birth. God is the indweller in everyone and directs human life as one’s inner conscience. If you let selfishness grow within you, it takes the form of lust, hatred and greed. These three vices are very dangerous and demonic. When worldly desires increase, the vices grow to the extent of making you lose faith in God and even lead you to developing enmity towards God. Never go after worldly happiness which is fraught with danger, giving up the Divine who is ready to be near and dear to you. Your parents or relatives may be away from you. God is never distant from you. He is always with you, behind you and around you, and He will always protect you. (My Dear Students, Vol 2, Ch 17, Sep 17, 1992.)
மனிதராகப் பிறப்பது புனிதமானதும், அரியதும் ஆகும். சுயநலத்தில் மூழ்கி இருப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் பிறப்பையும்,தங்களுள் உள்ள தெய்வீகத்தையும் குலைத்துக் கொள்கிறார்கள். நல்லொழுக்கமான வாழ்க்கை நடத்துவது ஒன்றே இப்பிறவியை புனிதமானதாக்கும். ஒவ்வொருவருள்ளும் இறைவன் உறைகிறான்; அவனே மனச்சாட்சியாக இருந்து மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறான். நீங்கள் உங்களுள் சுயநலத்தை வளர விட்டால், அது காம, க்ரோத,லோபமாக உருவெடுக்கிறது.இந்த மூன்று தீய குணங்களும் மிகவும் அபாயகரமானதும்,அசுரத்தனமானதும் ஆகும்.உலக ஆசைகள் அதிகரிக்கும் போது,இந்த தீய குணங்கள் உங்களை இறைவன் மீது உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்து, இறைவன் பால் த்வேஷத்தையே கூட வளர்க்கச் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடும். எப்போதும் உங்களுக்கு அருகாமையிலும் , நேசத்துடனும் இருப்பதற்குத் தயாராக இருக்கும் தெய்வீகத்தை விட்டு விட்டு, அபாயத்துடன் கூடிய உலகியலான சந்தோஷத்தின் பின்னால் அலையாதீர்கள்.உங்களது பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ உங்களை விட்டு தொலைவில் இருக்கக் கூடும். இறைவன் ஒருபோதும் உங்களை விட்டு தொலைவில் இருப்பதில்லை.அவன் எப்போதும், உங்களுள்,உங்கள் பின், உங்களைச் சுற்றி இருந்து, உங்களை எப்போதும் காத்திடுவான்.