azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Sakhubai, an ardent devotee of Lord Panduranga, went to saint Namadeva and submitted, “Master, I make so many cow dung cakes, but people are stealing them. I need to earn a livelihood by selling these, but very little is left for me to sell. What do I do?” Namadeva smilingly asked her, “How do you know that those stolen are your cow dung cakes?” Sakhubai promptly answered, “Master, I make them thinking and reciting Lord Panduranga’s name all the time; my feelings are reflected in them and they give amazing results!” She then asked Namadeva to break and listen to one cake. Everyone around Namadeva were greatly astonished to hear the inanimate cowdung cake reverberating with Panduranga’s name with the correct pitch, tune and rhythm. Mother Sakhubai said, “Not only in these cakes, but if we think of the Lord while performing every action, it will reflect and resound in the work we do!” (My Dear Students, Vol 3, Ch 13, Mar 16, 1998.)
பகவான் பாண்டுரங்கனின் பரம பக்தையான சக்குபாய்,நாமதேவரிடன் சென்று, '' குருவே! நான் பசுஞ் சாணத்தின் மூலம் பல வரட்டிகளைச் செய்கின்றேன், ஆனால் பலர் அவற்றைத் திருடிச் சென்று விடுகின்றனர். என் வாழ்க்கையை நடத்துவதற்கு, இவற்றை விற்பது எனக்குத் தேவை,ஆனால் விற்பதற்கு என்று எதுவுமே மிஞ்சுவதில்லை. நான் என்ன செய்வது?'' என்று கேட்டாராம்.நாம தேவர் புன்னகையுடன்,'' திருடப்பட்டவை எல்லாம் உன்னுடைய பசு வரட்டிகள் தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார். சக்குபாய் உடனேயே,'' குருவே ! நான் எப்போதும் பாண்டுரங்கனை நினைத்துக் கொண்டும், அவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டும் இவற்றை தயாரிக்கிறேன்; என்னுடைய உணர்வுகள் அவற்றில் பிரதிபலிக்கின்றன மேலும் அவை வியக்கத் தக்க விளைவுகளைத் தருகின்றன !'' என்றார்.அவள் பின்னர் நாமதேவரை ஒரு வரட்டியை உடைத்து அதைக் காதில் வைத்துக் கேட்கச் சொன்னார். நாமதேவரைச் சுற்றி இருந்த ஒவ்வொருவரும், அந்த உயிரற்ற பசு வரட்டி பாண்டுரங்கனின் நாமத்தை சரியான ராக,தாளத்துடன் ஒலிப்பதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். சக்குபாய் அம்மையார், '' இந்த வரட்டிகளில் மட்டும் அல்ல,நாம் பாண்டுரங்கனை ஒவ்வொரு செயலாற்றும் போதும் நினைவில் கொண்டால்,அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் '' என்றார்.