azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Dakshahis the quality of having firm determination to perform pure actions. The determination should be confined to actions that are pure, helpful to others and that sublimate you. At all circumstances, you must choose to act in a good manner and strictly refrain from any impure act. A person who can accomplish this is calledDakshah, and is very dear to the Lord.Udaseenahmeans the freedom from attachment. It means remaining serene and unruffled by fame or blame, peace or sorrow, loss or gain, pleasure or pain, not elated by prosperity or depressed by failure. You must never succumb to calumny, nor should you exult over fame. Fame and blame are like passing clouds; they must be treated the same. If you take them seriously, they will give rise to agitations in the mind, which may lead to demonic tendencies. Any devotee who possesses these sacred virtues is very dear to the Lord. (Divine Discourse, August 30, 1993.)
God is your nearest, dearest, most loving and most eager companion,
comrade and kinsman. - Baba
''தக்க்ஷ:'' என்பது தூய செயல்களை ஆற்றுவதில் மனத் திண்மையோடு இருக்கும் குணமாகும்.இந்த மன உறுதி தூய செயல்களை ஆற்றுவது, பிறருக்கு உதவுவது மற்றும் உங்களைப் பண்படுத்தும் செயல்களை செய்வது என்பவற்றில் மட்டுமே இருக்க வேண்டும்.அனைத்து சந்தர்ப்பங்களிலும்,நல்ல முறையில் செயலாற்றுவதையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; தூய்மையற்ற செயல்களிலிருந்து தூர விலகி இருக்க வேண்டும். இதை சாதிக்கும் ஒருவரையே '' தக்க்ஷ:'' எனலாம் ; அவரே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர். '' உதாசீன:'' என்றால் பற்றுதலிருந்து விடுபடுவது என்று பொருள். அதாவது, நிதானத்துடன்,புகழ்ச்சி அல்லது இகழ்ச்சி,சாந்தி அல்லது துக்கம்,நஷ்டம் அல்லது லாபம்,இன்பம் அல்லது துன்பம்,ஆகியவற்றால் பாதிக்கப் படாமலும்,வளம் பெறும் போது களிப்படையாமலும்,தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருப்பதாகும். நீங்கள் அவதூறுகளுக்கு அடிபணியாமலும், புகழ்ச்சிகளால் பேருவகை அடையாமலும் இருத்தல் வேண்டும். புகழ்ச்சியும்,இகழ்ச்சியும் கலையும் மேகங்கள் போன்றவை; அவற்றை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்.நீங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால், அவை மனக்கலக்கத்தை ஏற்படுத்தி, அசுர இயல்புகளுக்கு இட்டுச் சென்று விடும். இந்த புனிதமான நற்குணங்களை படைத்த எந்த ஒரு பக்தனும் இறைவனுக்கு பிரியமானவரே.
இறைவனே உங்களது மிக அருகாமையில் உள்ள, நெருங்கிய, அதிக நேசம் கொண்ட,அதிக ஆர்வமுள்ள துணைவன்,தோழன் மற்றும் உறவினன் ஆவான்.-பாபா