azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people speak about getting a vision of God. This is a naஞ்ve desire. They do not realize that God is present in everything they see. Scriptures declare that the one who fails to see the Divine manifest everywhere around them is a fool. Every being, every atom in this Universe is permeated by the Divine. So you must seek to realize your own inner Divinity and also recognize the Lord in all beings. You must manifest your loving nature, not become stone-hearted. For this, you must cultivate forbearance, love and compassion, and not resort to any sinful means. Your desires can never be fulfilled if you cause harm to others. If you are full of envy, pride and ostentation you cannot please God. The Divine will respond instantly only to unsullied love, and never to wealth, power or position. (Divine Discourse, Sep 14, 1997.)
Your heart is like a big container, senses are like taps. Fill the heart with the water of Love. Only then you can experience Love through all the senses. - Baba
பல மனிதர்கள் இறைவனது தரிசனத்தைப் பெறுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். இது சிறுபிள்ளைத்தனமான ஆசை.அவர்கள் காணும் அனைத்திலும் இறைவன் இருக்கிறான் என்பதை அவர்கள் உணரவில்லை.இறைவன் நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்திலும் வெளிப்படுகிறான் என்பதை உணராத ஒருவன், ஒரு முட்டாள் என்று மறை நால்கள் பறைசாற்றுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும், ஒவ்வொரு அணுவும் தெய்வீகத்தால் ஊடுருவி உள்ளது.எனவே,நீங்கள் உங்களுள் உள்ள தெய்வீகத்தை அறிய முயன்று,அனைத்து ஜீவராசிகளிலும் உறையும் இறைவனையும் உணர வேண்டும்.உங்களது அன்பான இயல்பை வெளிப்படுத்த வேண்டுமே அன்றி, கல்லான இதயமுள்ளவராக ஆகக் கூடாது.இதற்கு, நீங்கள் சகிப்புத் தன்மை, ப்ரேமை மற்றும் கருணையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி,எந்த விதமான பாபகரமான முறைகளில் ஈடுபடக் கூடாது. நீங்கள் பிறருக்கு துன்பம் விளைவித்தால்,உங்களது ஆசைகள் ஒருபோதும் பூர்த்தி அடையாது. நீங்கள் பொறாமை,தற்பெருமை மற்றும் படாடோபம் நிறைந்தவராக இருந்தால், நீங்கள் இறைவனை சந்தோஷப் படுத்த முடியாது. மாசற்ற ப்ரேமைக்கு இறைவன் உடனே பதிலளிப்பானே அன்றி, ஒருபோதும் பணம், பலம் அல்லது பதவிக்கு அல்ல.
உங்களது இதயம் ஒரு பாத்திரம் போன்றது, புலன்களே குழாய்கள்.இதயத்தை ப்ரேமை எனும் நீரால் நிரப்புங்கள்.அப்போது தான் அனைத்து புலன்களின் வழியாக நீங்கள் ப்ரைமையை அனுபவிக்க முடியும்.- பாபா