azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Is it possible for anyone in this world to be free of any desire and expectation? Not quite! Some things (material and sensual) may be attractive to some persons and some big aims (non-physical and transcendental) may interest others. Almost all desires fall into one of the above categories. Then how is it possible to get rid of both kinds of desires? This is possible! In the Gita, the Lord has declared that He is present in all righteous actions. Therefore those who perform righteous actions can developanapeksha(desirelessness). This means that when a man performs all actions as offerings to the Lord, they become desireless actions. The Lord is the One who from within, makes one act, speak, listen, see, etc. If a person performs all actions with the conviction that the indwelling Lord is the real Doer, then the actions become desireless. Hence to begin with everysadhakashould regard one’s actions as offerings to the Divine. (Divine Discourse, August 30, 1993.)
Have no desires to place before God, for whatever He does with you and however He treats you, is the gift He likes best to give you! - Baba
ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒருவர் இந்த உலகில் இருக்க இயலுமா? ஓரளவு முடியாது தான் !பொருட்கள் மற்றும் புலனின்பங்கள் சிலருக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; உயர்ந்த மற்றும் உலகியல் அல்லாதவற்றில் மற்றவர்களுக்கு விருப்பம் இருக்கலாம்.கிட்டத் தட்ட அனைத்து ஆசைகளும் இந்த இரண்டு வகைகளில் ஒன்றாகத் தான் இருக்கும். அப்படி என்றால்,இந்த இரண்டு விதமான ஆசைகைள எப்படி விட்டொழிப்பது? இது சாத்தியமே !ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான், அனைத்து தார்மீக கர்மங்களிலும் தான் இருப்பதாக பறை சாற்றுகிறார்.எனவே, தார்மீகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆசையற்ற நிலையை(அனபேக்ஷா) வளர்த்துக் கொள்ள முடியும். அதாவது, எப்போது ஒரு மனிதன் தனது அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அற்பணமாக ஆற்றுகிறானோ, அவை ஆசையற்ற செயல்களாக ஆகி விடுகின்றன. இறைவனே உள்ளிருந்து ஒருவரை செயலாற்ற,பேச,கேட்க,பார்க்க போன்றவற்றைச் செய்பவன். ஒருவர் ,தனது அனைத்து செயல்களையும் உள்ளிருந்து செயலாற்றுபவன் இறைவனே என்ற உணர்வுடன் ஆற்றினால், பின் அவை அனைத்தும் ஆசையற்றவைகளாக ஆகி விடுகின்றன. எனவே, முதன் முதலில் ஒவ்வொரு ஆன்மீக சாதகனனும், தனது செயல்களை இறைவனுக்கு அற்பணமாகக் கருத வேண்டும்.
இறைவன் முன் வைப்பதற்கு என எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில்,அவன் உங்களை என்ன செய்தாலும்,உங்களை எப்படி நடத்தினாலும், அதுவே அவன் உங்களுக்கு அவன் அளிக்க விரும்பும் சிறந்த பரிசாகும். -பாபா