azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The Gayatri mantra mentions: Bhur Bhuvaha Suvah - the Bhuloka, Bhuvarloka and Suvarloka (The human world, nether world and heaven). It is wrong to conceive of these three as existing one on top of the other. In fact the three lokas (worlds) are intertwined with each other and one exists within the other. The real meaning of this kind of geometrical configuration of the three lokas is that the pancha indriya, bhutas and koshas (five senses, elements and sheaths) that constitutes the body is Bhuloka; the aspect of prana shakti or manas thathvam (mind principle) is Bhuvarloka; and the microscopic state of Anandam (bliss) represents Suvarloka. So it can be said that the three worlds are nothing but thedeha thathwa, manas thathwa and Ananda thathwa (essential nature of body, mind and bliss) and the totality of these three represents the Trivikrama thathwa (nature of Vishnu expanding to the three worlds). (Divine Discourse, Sep 4, 1979.)
A heart saturated with love of God can never entertain any thoughts of violence. - Baba
காயத்ரி மந்திரம், '' பூர்,புவ,ஸ்வ: '' அதாவது பூலோகம், புவர் லோகம், மற்றும் ஸுவர் லோகம் ( மனிதர் வசிக்கும் பூமி, பாதாளம் மற்றும் சுவர்க்கம்) என மூன்று உலகங்களை விவரிக்கிறது.இந்த மூன்றும் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதாகக் கருதுவது தவறானது. உண்மையில் இந்த மூன்று உலகங்களும் ஒன்றை ஒன்று பிணைந்து, ஒன்றுக்குள் மற்றொன்றாக இருக்கின்றன. இப்படிப் பட்ட முவ்வுலக வடிவமைப்பின் உட்பொருள், பஞ்ச இந்திரியங்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் பஞ்ச கோசங்களைக் கொண்டது பூலோகம்;ப்ராண சக்தியின் அம்சம் அல்லது மனத்தத்துவமே புவர் லோகம்;நுண்ணிய நிலையான ஆனந்தமே ஸுவர் லோகம்.எனவே, இந்த மூன்று உலகங்களும், தேஹ தத்துவம் ( உடல் உணர்வு),மனோ தத்துவம்( மன உணர்வு) மற்றும் ஆனந்த தத்துவம்( பரமானந்த உணர்வு) அன்றி வேறல்ல என்றும்,இந்த மூன்றும் சேர்ந்து இருப்பதே திரிவிக்ரம தத்துவம் (பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு மூன்று உலகங்களிலும் வியாபித்திருக்கும் இயல்பு) என்றும் கூறப்படுகிறது.
இறைவன் பால் கொண்ட அன்பால் ததும்பும் இதயம்,வன்முறையான எண்ணங்களை ஒருபோதும் வரவேற்காது - பாபா