azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord resides not only in the hearts of devotees, but also in the hearts of the evil-minded. Once the child Prahlada approached his mother, Lilavati, and told her, "Mother, there is only one difference between me, who is a devotee of Hari and my father, who hates Hari. Ever contemplating on the nectarous sweetness of the Lord, repeating His name, and constantly remembering Him, I am immersed in the bliss of love of the Lord, like one intoxicated. My father, in his hatred of Narayana, has turned his heart into stone and installed Him in it." The Lord, who dwelt in the heart of Prahlada, who loved Narayana, and the Lord who was in the heart of Hiranyakasipu, who hated Narayana, was one and the same. One has to live in faith to experience happiness. Realising that the Divine is omnipresent, the devotees make their lives sublime by singing the glories of the Lord and ever dwelling on His name. (Divine Discourse 15 Sep 1986.)
Ignorance, Doubting Faith, Fickleness, Egoism—these tarnish a person’s nature and rob them of even the tiniest ounce of peace. - Baba
இறைவன் பக்தர்களது இதயங்களில் மட்டும் அல்ல,தீயவர்களின் இதயங்களிலும் உறைகிறான்.ஒருமுறை குழந்தையான ப்ரஹலாதன் தன் தாயான லீலாவதியை அணுகி, ''அம்மா! ஹரியின் பக்தனான எனக்கும் , ஹரியை வெறுக்கும் என் தந்தைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.பகவானது அமுதமான இனிமையை எப்போதும் தியானம் செய்து கொண்டு,அவரது நாமஸ்மர¨ணையை செய்து, அவரை நினைந்து,உன்மத்தம் கொண்டவனைப் போல பகவானது ப்ரேமானந்தத்தில் நான் மூழ்கித் திளைக்கிறேன்.எனது தந்தையோ, ஸ்ரீமந் நாராயணனின் மேல் கொண்ட த்வேஷத்தால், தனது இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு,அதில் பகவானை ப்ரதிஷ்டை செய்துள்ளார்'' என்று கூறினானாம். ஸ்ரீமந் நாராயணனை நேசிக்கும் ப்ரஹலாதனின் இதயத்தில் குடி கொண்டிருந்த இறைவனும், அவரை வெறுக்கும் ஹிரண்யகசிபுவின் இதயத்தில் குடி கொண்டிருந்த இறைவனும் ஒருவனே. ஒருவர் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் தான் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்ந்த பக்தர்கள், இறைவனது அருமை பெருமைகளைப் பாடுவதன் மூலமும், அவனது நாமத்தை ஸதாஸர்வகாலமும் தியானிப்பதன் மூலமும், தங்களது வாழ்க்கைகளை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
அறியாமை, சந்தேகமுள்ள நம்பிக்கை, ஊசலாடும் மனம்,அஹங்காரம்- இவை மனிதரது இயல்பை மாசுபடுத்தி, அவர்களது இம்மி அளவு சாந்தியைக் கூட பறித்து விடுகின்றன - பாபா