azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The story of the festival Onam is that of Emperor Bali, who was an embodiment of sacrifice (Thyaga), but who suffered from traces of ego (Ahamkara). Due to the predominance of other virtues and Lord Vishnu’s Grace, Emperor Bali overcame the ill-effects ofahamkaraand attained mergence with Lord Vishnu, who appeared as Vamana. Bali personified the principles of sacrifice, charity and righteousness till his very end. Since Onam festival day is celebrated in memory of the re-appearance of Bali in his subtle form (sukshma rupa), it is imperative that we remember and practice the ideals for which he lived. Bali, as portrayed above, should be visiting us every day and not just once a year. We forget this and in our daily life leave ample room for the cultivation of undesirable traits such as greed, selfishness and egoism. Learning from Bali's life you must eradicate the negative traits at all costs, and render your heart pure for the Lord to reside in it. (Divine Discourse, 4 Sep 1979.)
All that you do with purity of heart will find fulfilment. - Baba
ஓணம் பண்டிகை, தியாகத்தின் உருவே ஆன, ஆனால் அஹங்காரத்தின் சுவடுகளால் பாதிக்கப் பட்ட பலிச் சக்கரவர்த்தியின் கதையாகும்.மற்ற நற்குணங்கள் மேலாங்கி இருந்ததாலும், பகவான் மஹாவிஷ்ணுவின் அருளாலும், பலிச் சக்கரவர்த்தி அஹங்காரத்தின் தீய விளைவுகளை வென்று, தன் முன் வாமனராகத் தோன்றிய பகவான் மஹாவிஷ்ணுவுடன் ஒன்றரக் கலந்தார். பலிச் சக்கரவர்த்தி இறுதி வரை தியாகம், தானம் மற்றும் தர்மம் என்ற கோட்பாடுகளின் திரு உருவாகத் திகழ்ந்தார்.ஓணம் பண்டிகை தினம், பலிச் சக்கரவர்த்தி மறுபடியும் தனது சூக்ஷ்ம சரீரத்தில் தோன்றியதன் நினைவைக் குறிப்பதற்காக கொண்டாடப்படுவதால்,அவர் வாழ்ந்து காட்டிய இலட்சியங்களை நாம் நினைவு கூர்ந்து, அவற்றைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியம். இப்படிப் விவரிக்கப் பட்ட பலிச் சக்கரவர்த்தி வெறும் வருடம் ஒரு நாள் மட்டும் இல்லாமல், தினந்தோறும் நம்மை சந்திக்க வர வேண்டும். இதை நாம் மறந்து விடுகிறோம்;நமது தினசரி வாழ்க்கையில் விரும்பத் தகாத குணங்களான பேராசை,சுயநலம் மற்றும் அஹங்காரம் போன்றவை வளர அதிகமாக இடம் கொடுத்து விடுகிறோம். பலிச் சக்கரவர்த்தியின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டு, நீங்கள் எப்பாடு பட்டாவது, தீய மனப்பாங்குகளை விட்டொழித்து, இறைவன் உறையத் தக்கதாக உங்கள் இதயத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இதயத் தூய்மையுடன் நீங்கள் செய்யும் அனைத்தும் பரிபூரணத்துவம் பெறும்- பாபா