azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Desire (kama) must be got rid of by Tyaga (sacrifice) and Yoga (communion) to secure God (Rama). Desire discolours the intelligence, perverts judgment, and sharpens the appetites of the senses. It lends a false lure to the objective world. When desire is directed to God, the self-luminous intelligence within shines in its pristine splendour, and reveals God within and without, and you attain Self-Realisation(Atma Sakshatkara).I bless all of you to succeed in yourSadhana(spiritual efforts)! If you have not been practicing sincerely until now, take up the simple practice of remembrance of the Divine(Namasmarana), along with reverence towards parents, teachers and elders, and service to the poor and needy. See everyone as yourlshtadhevata(Beloved Lord). That will fill your heart with Love and give you stability of mind and peace. (Divine Discourse, May 15, 1969.)
A good student is an offering that a good teacher makes to the nation. - Baba
ஆசைகளை (காமம்), தியாகத்தின் மூலம் அழித்து, யோகத்தின் மூலம் இறைவனை (ராமம்) அடைய வேண்டும்.ஆசை புத்தியை மாசுபடுத்தி, பகுத்தறிவை தடுமாறச் செய்து,புலன்களின் பசியைத் தீவிரமாக்குகின்றன . பொருட்களாலான இந்த உலகத்தின் மீது போலியான ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.ஆசை, இறைவனை நோக்கிச் செலுத்தப் படும்போது, சுயம்பிரகாசமான புத்தி ஒளிர் விட்டுத் திகழ்ந்து,உள்ளும் ,புறமும் உள்ள இறைவனை வெளிக்காட்டுகிறது; நீங்கள் ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுகிறீர்கள். உங்களது ஆன்மீக சாதனையில் நீங்கள் அனைவரும் வெற்றி அடைய நான் ஆசீர்வதிக்கிறேன் ! இந்நாள் வரை நீங்கள் உளமாற இதைப் பயிற்சி செய்யவில்லை என்றாலும், எளியமுறையான இறைநாமஸ்ரணையுடன் கூடவே,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களை மதித்து,ஏழை , எளியவர்களுக்கு சேவை ஆற்றுங்கள். ஒவ்வொருவரையும் உங்களது இஷ்டதேவதையாகவே கருதுங்கள். அதுவே உங்களது இதயத்தை ப்ரேமையால் நிரப்பி, மனத்திண்மையையும்,மனச்சாந்தியையும் அளிக்கும்.
ஒரு நல்ல மாணவனே,ஒரு நல்ல ஆசிரியர் நாட்டிற்கு அளிக்கும் ஒரு அற்பணிப்பாகும் - பாபா