azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Sep 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Remember, hands that serve are greater than the lips that pray. Real humanness consists in dedicating oneself to the spirit of service. Quantity does not matter; quality of service counts. Whatever you do, do it wholeheartedly and spontaneously. The primary requisite is purification of the heart(Chittha Shuddhi).When your heart is purified, you get Supreme Wisdom(Jnana siddhi)and you can dedicate all actions in a spirit of detachment. Divine love can be secured only by dedicated service. God responds bounteously to your offer. For a handful of parched rice given to Krishna Kuchela got in return limitless prosperity. Draupadi was rewarded likewise. How can you receive God’s love if you do not love Him? God’s Grace is like a bank. You can draw money from that bank only to the extent to which you have built up deposits throughTyaga(sacrifice). Earn God's grace through love and sacrifice. (My Dear Students, April 27, 1990)
துதிபாடும் உதடுகளை விட, துயர் துடைக்கும் கரங்களே மேன்மையானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சேவை உணர்வில் ஒருவர் தன்னை அர்ப்பணம் செய்து கொள்வதில் தான் மனிதத்துவம் இருக்கிறது.எண்கள் முக்கியமல்ல,சேவையின் தரமே பிரதானம். நீங்கள் எதைச் செய்தாலும் முழுமனதுடனும், தன்னெழுச்சியுடனும் செய்யுங்கள். முதன் முதலில் தேவைப் படுவது இதயத் தூய்மையே (சித்த சுத்தி).உங்கள் இதயம் தூய்மை அடைந்தால், உங்களுக்கு ஞான சுத்தி கிடைக்கிறது;மேலும் நீங்கள் அனைத்து செயல்களையும்,பற்றுதலற்ற உணர்வோடு அர்ப்பணிக்க முடியும். தெய்வீக ப்ரேமையை, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த சேவையினால் மட்டுமே பெற முடியும். உங்களது அர்ப்பணிப்புக்கு இறைவன் அள்ளித் தருவான். குசேலர் அளித்த ஒரு பிடி அளவு அவல், பதிலுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து அளவற்ற செல்வத்தை அவருக்கு அள்ளித் தந்தது. திரௌபதிக்கும் இத்தகைய பரிசு கிட்டியது.நீங்கள் இறைவனை நேசிக்காமல் அவனது ப்ரேமையை எவ்வாறு பெற முடியும்? இறை அருள் என்பது ஒரு வங்கியைப் போன்றது. தியாகத்தின் மூலம் நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் அளவு தான், நீங்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.ப்ரேமை மற்றும் தியாகத்தின் மூலம் இறை அருளை ஈட்டுங்கள்.