azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

What does the termGanapathisignify?Gameans intellect (Buddhi).Nameans Wisdom (Vijnaana).Ganapathimeans the Lord of the intellect and of wisdom. He is also the Lord of allGanas(spiritual entities).Ganasalso symbolise the senses.Ganapathiis thus the Lord of the senses. Hence on thisGanapathifestival, you must purify your mind and offer it to Him. It is only when one is pure that intelligence blossoms. It is only with the blossoming of intelligence thatSiddhi(the spiritual goal) is attained.Vinayakapresides overBuddhiandSiddhi(the intellect and spiritual realisation).Siddhisignifies the realisation of Wisdom. That is why the scriptures say thatSiddhiandBuddhiare the consorts of Vinayaka, andKshema(well being) andAnanda(bliss) are His two sons.(My Dear Students, Vol 3, Ch 7, Jul 9 1989.)
When you ignore your defects and magnify the faults in others, you are practicing violence. - Baba
'' கணபதி'' என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? '' க'' என்றால் புத்தி, ''ண'' என்றால் ஞானம். கணபதி என்றால் புத்திக்கும், ஞானத்திற்கும் அதிபதி என்று பொருள்.அவர் கணங்களுக்கு எல்லாம் தலைவர்.கணங்கள் என்பது புலன்களையும் குறிக்கின்றன.கணபதி எனவே, அனைத்து புலன்களுக்கும் அதிபதியும் ஆவார். எனவே, இன்றைய கணபதி பண்டிகையில் நீங்கள் உங்களது மனதைத் தூய்மைப் படுத்தி அதை இறைவனுக்கு அற்பணிக்க வேண்டும். ஒருவர் தூய்மையாக இருந்தால் மட்டுமே புத்தி பரிமளிக்கும்.புத்தி பரிமளிக்கும் போது தான் ஆன்மீக உணர்வான சித்தி பரிமளிக்கும். விநாயகர், புத்தி மற்றும் சித்திக்கு தலைமை தாங்குபவர். சித்தி ,ஞானம் தோன்றுவதை எடுத்துக் காட்டுகிறது. அதனால் தான் சாஸ்திரங்கள் புத்தியும்,சித்தியும் விநாயகரின் மனைவியர் என்றும், க்ஷேமமும்,ஆனந்தமும் அவரது புதல்வர்கள் என்றும் வர்ணிக்கின்றன.
நீங்கள் எப்போது உங்களது குறைகளைக் கண்டு கொள்ளாமல், பிறரிடம் உள்ள குறைகளைப் பெரிது படுத்துகிறீர்களோ,நீங்கள் வன்முறையைக் கடைப் பிடிப்பவர்களே - பாபா