azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The stream of life is marked by different stages - in each stage you fall a prey to vices like egoism, jealousy and falsehood instead of cultivating truth, righteousness and humility. During your childhood, you lead an innocent life without being aware of the distinction between the worldly and sacred paths (PreyoandSreyo Marga). But as age advances, you take to the worldly path, rather than to the sublime path. Plunging into the river of desire, tossed by the waves of delusion, getting immersed in the waters of family life, and submerged by peacelessness and strife, you are swallowed by the whale of discontentment. To turn human life from this mundane existence towards the Divine it is essential to have association with Truth,Sath sangam.Sathrefers to that which remains the same regardless of time, place or circumstance. One should associate oneself with this Truth. Merging the consciousness with this Truth you should experience the bliss of such association. (Divine Discourse, 31 Aug 1992.)
வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு பல்வேறு நிலைகள் உள்ளன-ஒவ்வொன்றிலும், சத்யம், தர்மம் மற்றும் பணிவு என்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளாமல், நீங்கள் அஹங்காரம்,அசூயை( பொறாமை) மற்றும் அஸத்யம் என்ற தீய குணங்களுக்குப் பலியாகி விடுகிறீர்கள். உங்களது குழந்தைப் பருவத்தில், நீங்கள், உலகியலான மற்றும் புனிதமான ( ப்ரேயோ மற்றும் ஸ்ரேயா மார்க்கங்கள்) பாதைகளுக்கான வித்தியாசத்தை உணராது, அப்பாவித் தனமான வாழ்க்கையை நடத்துகிறீர்கள்.ஆனால், வயசு ஆக ஆக, புனிதமான பாதையை விடுத்து, நீங்கள் உலகியலான பாதையிலேயே செல்லுகிறீர்கள். ஆசைகள் எனும் ஆற்றில் குதித்து,மாயை எனும் அலைகளால் பந்தாடப்பட்டு, ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி,அஸாந்தி மற்றும் கலவரத்தால் அமிழ்த்தப் பட்டு, நீங்கள் அதிருப்தி என்ற திமிங்கிலத்தால் விழுங்கப் படுகிறீர்கள். இப்படிப் பட்ட உலகியலான மனித வாழ்க்கையை இறைவனை நோக்கித் திருப்ப, ஸத்யத்துடன் உறவை அதாவது ஸத்ஸங்கத்தை, ஏற்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும். ஸத்யம் என்பது கால, தேச வர்த்தமானங்களால்( காலம், இடம் மற்றும் சூழ்நிலைகள்) பாதிக்கப்படாது என்றும் ஒரே மாதிரியாக இருக்கும் ஒன்றைக் குறிப்பதாகும். ஒருவர் இப்படிப் பட்ட ஸத்யத்துடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனச்சாட்சியை இந்த ஸத்யத்துடன் ஒன்றரக் கலக்கச் செய்து, இந்த உறவின் ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும்.