azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Today there is much controversy and conflict that brews amongst all religions. There is nothing wrong with any religion. All religions are here to teach good sense. All religions propose the same Truth; they adore the same One God and the essence of all texts is the same. Hence every being must depend upon their own sanctity and morality, and try to nurture them. Morality is the lamp within every individual. Without this lamp, there will only be darkness around. This is the essence of the chant, “Lead us from untruth to truth, from darkness to light, and from death to immortality (Asathoma Sadgamaya, Tamasoma Jyothirgamaya, Mruthyorma Amrutham Gamaya)”. Sages searched for God and finally declared that they have identified Him and have known Him. Where did they see God? It is within their hearts. They said that they saw the Absolute Being who is beyond all darkness. (My Dear Students, Vol 2, Ch 16, Jul 23, 1989)
When the mind is filled with good thoughts, such as truth, love, forbearance and compassion, one’s life is filled with peace and serenity. - Baba
இன்று மதங்களுக்கு இடையில் அதிகமான அளவு சண்டை மற்றும் சச்சரவுகள் தோன்றியுள்ளன.எந்த ஒரு மதத்திலும் ஒரு தவறும் இல்லை. அனைத்து மதங்களும் நல்லெண்ணங்களையே போதிப்பதற்காகவே வந்துள்ளன. அனைத்து மதங்களும் ஒரே சத்தியத்தைத் தான் முன் வைக்கின்றன; அவை அனைத்தும் ஒரே கடவுளைத்தான் போற்றுகின்றன மேலும் அனைத்து மறை நால்களின் சாரமும் ஒன்றே.எனவே, ஒவ்வொருவரும் தங்களது சொந்த புனிதத்துவம் மற்றும் நல்லொழுக்கத்தை ஆதாரமாகக் கொண்டு அவற்றை வளர்க்க முயற்சிக்க வேண்டும். நல்லொழுக்கமே ஒவ்வொரு மனிதனுள்ளும் உறையும் தீபமாகும்.இந்த தீபம் இல்லை எனில் எங்கும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்கும்.இதுவே,'' அஸதோமா ஸத்கமய, தமஸோமா ஜ்யோதிர்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய ''(நாம் அஸத்யத்திலிருந்து ஸத்யத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கும் முன்னேறுவோமாக) என்ற உச்சாடனத்தின் சாரமாகும்.முனிவர்கள் இறைவனைத் தேடினர்; இறுதியாக அவனைக் கண்டு விட்டோம், அவனைத் தெரிந்து கொண்டோம் என பறைசாற்றினார்கள்.அவர்கள் இறைவன எங்கே கண்டார்கள்?அவர்களது இதயங்களுக்கு உள்ளே தான். இருட்டிற்கு எல்லாம் அப்பாற்பட்ட பரப்ரம்மத்தை நாங்கள் கண்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.
எப்போது மனம் சத்யம்,ப்ரேமை,பொறுமை மற்றும் கருணை போன்ற நல்ல எண்ணங்களினால் நிரம்பி இருக்கிறதோ ஒருவரது வாழ்க்கையும் சாந்தி மற்றும் அமைதியினால் நிரம்பி இருக்கும் - பாபா