azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

There are four goals (Purusharthas) in the world that people aspire for. They are Righteousness (Dharma), Wealth (Artha), Desire (Kama) and Liberation (Moksha). Realising God is the worthiest and highest goal in life. When such God is seen, realised and a close relationship is established with Him, the happiness one enjoys then, that state of liberation, that principle of love has been called as devotion of the highest order (Parabhakthi). This devotion is liberation itself; it is attaining oneness with God. Liberation is the ability to look for unity in diversity, rather than calling out the obvious differences. AttainingParabhakthiis not easy. It is definitely possible for those who yearn and work towards it. Do not get confused that you are unique and others are different. You will be in doubt if you miss the principle of unity in your daily lives. So long as there is doubt, you cannot realize the eternal truth.(My Dear Students, Vol 3, Ch 7, July 9 1989)
Devotion to the Divine will give you bliss, prosperity and peace. - Baba
இந்த உலகில் மனிதர்கள் நான்கு விதமான குறிக்கோள்களை (புருஷார்த்தங்கள்) நாடுகிறார்கள்.அவையே தர்மம்,அர்த்தம்( செல்வம்), காமம் ( ஆசைகள்) மற்றும் மோக்ஷம் (இறைவனை அடைவது). இறைவனை உணர்வதே வாழ்வின் மதிப்புள்ள மற்றும் தலை சிறந்த குறிக்கோளாகும். அப்படிப் பட்ட இறைவனைக் கண்டு,உணர்ந்து, அவனுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்ட பின் ஒருவர் அடையும் ஆனந்தம், அந்த பேரானந்த நிலை,அந்த ப்ரேமை தத்துவம், தலைசிறந்த பக்தியான '' பரபக்தி '' எனப்படுகிறது. இந்த பக்தியே மோக்ஷமாகும்;அதுவே இறைவனுடன் ஒன்றரக் கலப்பதாகும். மோக்ஷம் என்பது, வெளிப்படையாகத் தெரியும் வித்தியாசங்களைப் பாராட்டாது, வேற்றுமையில், ஒற்றுமையைக் காணும் திறனாகும். '' பரபக்தியை '' அடைவது எளிதானதல்ல. அதற்காக ஏங்கி, அதை நாடி முயல்பவர்களுக்கு அது சாத்தியமானதே. நீங்கள் ஏதோ தனிப்பட்டவர், மற்றவர்கள் வேறு மாதிரியானவர்கள் என எண்ணிக் குழப்பம் அடையாதீர்கள். உங்களது அன்றாட வாழ்க்கையில் இந்த ஒற்றுமைத் தத்துவத்தைக் கைவிட்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் சந்தேகத்திலேயே இருப்பீர்கள்.இந்த சந்தேகம் உள்ளவரை, ஸாஸ்வதமான சத்தியத்தை நீங்கள் உணர முடியாது.
இறைவன் பால் கொள்ளும் பக்தி உங்களுக்கு ஆனந்தம்,செல்வம் மற்றும் சாந்தியைத் தரும். - பாபா