azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All five elements are present in the human form. From the Element of Space, emotions, prejudices, apprehensions, shyness and the like are born. The Element of Air within the body causes the reflexes and movements like walking, respiration, etc. Hunger, thirst, sleep and fear are aspects of Fire. Blood, mucus and saliva emanates from the Element of Water. Finally skin, muscles, veins, bones and nails are the aspects representing the Earth Element. When you internalise this truth, who can argue, “This is mine, that is yours”, “I am greater, you are inferior” and so on. Anyone who speaks thus is dull-headed, unable to appreciate and see the reality. If only they have a deeper understanding, they can comprehend the truth in creation. Never be bogged down by the prevailing times or circumstances. That will amount to leading a narrow life. Develop an expansive way of life and carefully tread the path, that is ever new, holy and eternal. (My Dear Students, Vol 2, Ch 16, Jul 23, 1989.)
The state when your mind and intellect unites, is called freedom, also known as liberation (Moksha). - Baba
மனித உடலில் பஞ்சபூதங்களும் உள்ளன.ஆகாசத்திலிருந்து, உணர்ச்சிகள், பாரபட்சங்கள்,கவலைகள்,கூச்சங்கள் போன்றவை பிறக்கின்றன. உடலுக்குள் இருக்கும் காற்று, நடப்பது,சுவாசிப்பது போன்ற தன்னிச்சையான செயல்கள் மற்றும் அசைவுகளை ஏற்படுத்துகிறது.பசி,தாகம்,தூக்கம் மற்றும் அச்சம் ஆகியவை நெருப்பின் அம்சங்கள்.இரத்தம்,சளி மற்றும் எச்சில் ஆகியவை நீரிலிருந்து எழுகின்றன. இறுதியாக, தோல், தசைகள், இரத்த நாளங்கள், எலும்பு மற்றும் நகங்கள் போன்ற அம்சங்கள் பூமியைக் குறிக்கின்றன.இந்த உண்மையை நீங்கள் தம்முள் ஆக்கிக் கொண்டு விட்டால், '' இது என்னுடையது, அது உன்னுடையது '' என்றும், '' நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் '' என்றும் யார் தான் வாதிக்க முடியும்?இவ்வாறு பேசும் எவரும் உண்மையை பாராட்டவோ,பார்க்கவோ இயலாத அறிவிலிகளே.அவர்களுக்கு மட்டும் ஒரு ஆழ்ந்த புரியும் தன்மை மட்டும் இருந்தால் ,சிருஷ்டியில் உள்ள சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.தற்போது இருக்கும் காலம் மற்றும் சூழ்நிலைகளால் சோர்ந்து போய் விடாதீர்கள்.அது குறுகிய வாழ்க்கை நடத்துவதைப் போல் ஆகி விடும். வாழ்க்கையைப் பற்றிய பரந்த மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு,என்றும் புதியதான,புனிதமான மற்றும் நிலையான பாதையில் கவனமாகச் செல்லுங்கள்.
உங்கள் மனமும்,புத்தியும் ஒன்றிணையும் நிலையே மோக்ஷம் என்றும் அழைக்கப்படும் சுதந்திரமாகும் -பாபா