azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

A scabbard is a sheath for the sword. Rice is sheathed in a husk. A tamarind seed is sheathed by tamarind pulp, which in turn is sheathed by the outer shell. Thus when one thing hides another thing and its identity, it is called as a Sheath. Every human body is made up of five sheaths – TheAnnamaya(food)Koshasheath covers thePranamaya(life)Kosha.Pranamayasheath coversManomaya(mind)Kosha, which in turn coversVijnanamaya(intellect)Kosha.The Anandamaya(bliss)Koshais the kernel hidden inVijnanamaya Kosha, wherein the soul resides. Thus the Divine Soul is safely secured within each being without exception. Hence, everyone has the equal right and opportunity to seek the soul within them. But then one has to feel an urge to attain it and direct their activities towards it. By birth, the urge to attain and experience the Atmic status has been gifted to everyone, automatically. (My Dear Students, Vol 2, Ch 16, Jul 23, 1989.)
To experience the Divine, people should close their mouths and open their hearts. -Baba
வாள் உறை ஒரு வாளுக்கு வெளி உறையாக இருக்கிறது.அரிசிக்கு உமி வெளி உறையாக இருக்கிறது.புளியங்கொட்டை, புளியினாலும், அதுவே அதன் வெளி ஓட்டினாலும் மூடப்பட்டு இருக்கிறது. இப்படி, எப்போது ஒன்று மற்றொன்றை மூடி, மறைக்கிறதோ அதுவே உறை எனப்படுகிறது.ஒவ்வொரு மனித உடலும் ஐந்து உறைகளால்( கோசங்கள்) ஆனவை. - அன்ன மய கோசம்,ப்ராணமய கோசத்தை மூடி உள்ளது. ப்ராணமய கோசம் மனோமய கோசத்தையும், மனோமய கோசம் விஞ்ஞானமய கோசத்தையும் மூடி இருக்கிறது. ஆத்மா உறையும்,ஆனந்த மய கோசம் , விஞ்ஞான மய கோசம் என்ற உறைக்குள் ஒளிந்து இருக்கும் பருப்பு போன்றதாகும்.இவ்வாறு தெய்வீகமான ஆத்மா, எந்த விதிவிலக்கும் இன்றி ,ஒவ்வொரு ஜீவ ராசியினுள்ளும் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் தங்களுள் உறையும் ஆத்மாவைத் தேடுவதில் சரி சமமான உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அதை அடைய வேண்டும் என்ற அவா ஒருவருக்கு இருக்க வேண்டும் ;மேலும் தங்களது செயல்கள் அனைத்தையும் அதைக் குறித்தே ஆற்ற வேண்டும்.பிறவியிலிருந்தே ஆத்ம நிலையை அடைந்து அனுபவிக்கும் உந்துதல் ஒவ்வொருவருக்கும் தானாகவே, பரிசாக அளிக்கப் பட்டுள்ளது.
தெய்வீகத்தை அனுபவிக்க வேண்டுமானால், மனிதர்கள் தங்கள் திருவாய்களை மூடி, இதயக் கதவுகளைத் திறக்க வேண்டும் - பாபா