azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You must welcome both summer and winter, for they are both essential for the process of living. The alternation of seasons toughens and sweetens us. Birth and death are both natural events. We cannot discover the reason for either birth or death. They simply happen. Hence we must learn to welcome the field of natural ups and downs (Prakrithika). The second is the field of social equanimity: We often try to blame some person or some incident for the injury or loss we suffer but the real reason is our ownkarma(action). When the background of the event is known, the impact can be lessened or even negated. Hence you must welcome with equal-mindedness fame and blame, respect and ridicule, profit and loss, and such other responses and reactions from the society in which one has to grow and struggle. (Divine Discourse, Sep 7, 1985.)
Fortune is as much a challenge to one's equanimity as misfortune. - Baba
வாழும் முறைக்கு இரண்டுமே மிகவும் அத்தியாவசியம் என்பதால் , நீங்கள் கோடை காலம், குளிர் காலம் என்ற இரண்டையும் வரவேற்க வேண்டும். பருவங்கள் மாறி மாறி வருவது நம்மை வலுப்படுத்தி, இனிமையூட்டுகின்றன. பிறப்பு, இறப்பு என்ற இரண்டுமே இயற்கையான நிகழ்வுகள்.பிறப்பிற்கோ, அல்லது இறப்பிற்கோ நாம் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாது.அவை தானே நிகழ்பவை.எனவே, இயற்கையாக நிகழும் (ப்ருக்ருதிகா), ஏற்றத் தாழ்வுகளை , நாம் வரவேற்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது சமுதாயத்தில் சமச்சீரான மனப்பாங்கு.நாம் பெரும்பாலும், நமக்கு ஏற்படும் துன்பம் அல்லது காயத்திற்கு யாரையாவது அல்லது ஏதாவது ஒரு நிகழ்வையாவது குறை கூறுகிறோம்; ஆனால், அதற்கான உண்மைக் காரணம் நமது செயல்களே (கர்மா),ஒரு நிகழ்விற்குப் பின்னால் உள்ள காரணம் தெரிந்தால், அதன் பாதிப்பைக் குறைக்கவோ, அல்லது அதை அழிக்கவோ கூட முடியும்.எனவே,புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சி, மரியாதை மற்றும் அவமரியாதை, லாபம் மற்றும் நஷ்டம் மேலும் ஒருவர் வளர்ந்து ,போராட வேண்டிய சமுதாயத்திலிருந்து வரும் எதிர்செயல் மற்றும் எதிர் வினைகளை, நீங்கள் சமச்சீரான மனப்பாங்குடன் வரவேற்க வேண்டும்.
துரதிருஷ்டத்தைப் போலவே, அதிருஷ்டமும் ஒருவரது சமச்சீரான மனப்பாங்கிற்கு அதே அளவிலான ஒரு சவாலாகும் -பாபா