azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The external is the creation of the internal. Brahmam manifested itself as the Universe. God created the world; the world conferred the glory of 'Creator' on God. Through his yearning, imagination and intensity man endowed God with a form and name, and a bunch of attributes from which he hopes to benefit. But, God is above and beyond human traits and characteristics known as Gunas. Krishna told Arjuna in the Bhagavad Gita, "I have no need to engage Myself in any activity. But yet, I am busy acting, in order to promote the well-being of the Universe." The Gita refers to its chapters asYoga.Yogameans union of the Self with its source. How do the eighteen chapters, each aYoga, help man to fulfill his destiny? The Gita provides the answer: "Samathvam Yogam Uchyathe" (Yogais being in a state of equal-mindedness or equanimity).(Divine Discourse, Sep 7, 1985)
புறத்தில் தோன்றும் அனைத்தும் அகத்தின் சிருஷ்ட்டியே.பரப்பிரம்மம் தன்னை இந்த பிரபஞ்சமாக தோற்றுவித்துக் கொண்டது.இறைவன் இந்த உலகைப் படைத்தான்;இந்த உலகம் இறைவனுக்கு '' படைத்தவன்'' (சிருஷ்ட்டி கர்த்தா) என்ற மகத்தான பட்டத்தை அளித்தது.தனது தாபம், கற்பனை மற்றும் தீவிரத்துடன் மனிதன், இறைவனுக்கு ஒரு ரூபம், நாமம் மற்றும் தனக்கு பயன்களை நல்கும் என்ற எதிர்பார்ப்புடன் சில குணாதிசியங்களையும் அளித்துள்ளான். ஆனால் இறைவன் மனித குணங்கள் எனப்படுபவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன்.ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜூனனிடம், '' எந்த கர்மத்தில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஆனால், இருந்தாலும் நான், லோகக்ஷேமத்திற்காக சுறுசுறுப்பாகச் செயலாற்றிக் கொண்டே இருக்கிறேன்.'' என்கிறார். ஸ்ரீமத் பகவத் கீதை, தனது அத்யாயங்களை '' யோகம்'' என குறிப்படுகின்றது. '' யோகம் '' என்றால் ஆத்மா, தனது மூலமான பரமாத்மாவுடன் ஒன்றரக் கலப்பது என்று பொருள்.ஒவ்வொன்றும் '' யோகம்'' ஆன ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டு அத்யாயங்கள்,மனிதன் தனது குறிக்கோளை எட்ட எவ்வாறு உதவுகின்றன? ஸ்ரீமத் பகவத் கீதை இதற்கு , ''ஸமத்வம் யோகம் உச்யதே '' ( யோகம் என்றால் சமச்சீரான மனநிலையில் எப்போதும் இருப்பதே) என விடையளிக்கிறது.