azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Tell your hand, “Oh hand, how sacred you are? You are unity personified. One finger cannot lift a cup; when one finger moves to pick it up, all of you, though different in sizes and shape, rush to help and hold the cup! You don’t care for or observe any difference. Such is the unity inherent in you, amongst your fingers. Oh hand, you are very helpful in preserving the human body, you remove troubles through your hard work and you help others. Why do you sometimes act in a manner that develops enmity? Today there is no unity in any congregation, society or religion. However, you know no hatred. Please never indulge in wrong actions.” Thus instruct and guide your hand so that your actions become sacred. When your thoughts, words and deeds are sanctified, all the other instruments also follow suit and thus you attain liberation. (My Dear Students, Vol 5, Ch 2, Mar 9, 1993)
Hands that help are holier than lips that pray. – Baba
உங்களது கைக்கு இவ்வாறு சொல்லுங்கள்,'' ஓ கையே !நீ எவ்வளவு புனிதமானவன்? ஒற்றுமையின் திரு உருவம் நீ.ஒரு விரலால், ஒரு கோப்பையைத் தூக்க முடியாது; எப்போது ஒரு விரல் அதைத் தூக்க நகருகிறதோ, நீங்கள் அனைவரும், பல் வேறு நீளம் மற்றும் உருவில் இருந்த போதும், விரைந்தோடிச் சென்று உதவி, அந்தக் கோப்பையை பிடித்துக் கொள்ளச் செய்கிறீர்கள்! நீ,எந்த வித்தியாசத்தைக் காணவோ அல்லது அதைப் பற்றிக் கவலைப் படவோ செய்வதில்லை.உனது விரல்களுக்கிடையில், உன்னில் இயற்கையாகவே காணப்படும் ஒற்றுமை இத்தகையது. ஓ கையே! மனித உடலைக் கட்டிக் காக்க நீ மிகவும் உதவுகிறாய்,உனது கடின உழைப்பின் மூலம் துன்பங்களை நீக்குகிறாய் மேலும் பிறருக்கு உதவுகிறாய். நீ ஏன் சில சமயங்களில் த்வேஷத்தை வளர்க்கும் விதத்தில் செயலாற்றுகிறாய்?இன்று எந்தக் கூட்டத்திலும், சமூகத்தில் அல்லது மதத்திலும் ஒற்றுமையே இல்லை. ஆனால் நீ த்வேஷம் அறியாதவன். தயவு செய்து தவறான செயல்களில் ஈடுபடாதே.'' இவ்வாறு அறிவுறுத்தி உங்களது செயல்கள் புனிதமாக இருப்பதற்கு, உங்கள் கைகளுக்கு வழி காட்டுங்கள். எப்போது உங்கள் எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள் புனிதப் படுத்தப் படுகின்றனவோ, அனைத்து பிற அங்கங்களும் அவ்வாறே புனிதமடைந்து, இவ்வாறு நீங்கள் மோக்ஷம் அடைவீர்கள்.
துதி பாடும் உதடுகளை விட துயர் துடைக்கும் கரங்களே புனிதமானவை-பாபா