azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is a precious diamond that can be got only in the realm of love and nowhere else. The kingdom of Love is located in every love-filled heart. Love can be experienced only in a mind flowing with love. The precious diamond of Love cannot be obtained merely through meditation or following prescribed sacred rituals. At best they only give mental satisfaction. The greater your love for God, the greater is the bliss you experience. When love declines in you, your joy also declines proportionally. Hence you must fill your heart with love for God. Love will not enter your heart if it is already filled with selfishness and self-conceit. Hence forget your petty self and concentrate your thoughts on God. If you love God, you will see Him everywhere. The essence of all spiritual disciplines is contained in Love.(Divine Discourse, Sep 2, 1991.)
Love is God’s only property. It cannot be purchased anywhere;
it issues from the heart. – Baba
ப்ரேமை என்பது விலைமதிக்க முடியாத ஒரு மாணிக்கம்; அதை ப்ரேமையின் சாம்ராஜ்யத்தில் மட்டுமே பெற முடியுமே அன்றி வேறு எங்கும் அல்ல. ப்ரேமையில் தோய்ந்த ஒவ்வொரு இதயத்திலும் ப்ரேமையின் சாம்ராஜ்யம் அமைந்துள்ளது.ப்ரேமை பெருகி ஓடும் மனத்தினால் மட்டுமே ப்ரேமையை அனுபவிக்க முடியும்.ப்ரேமை என்ற இந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்தை வெறும் தியானத்தினாலோ, அல்லது குறிப்பிட்ட சில புனித சடங்குகளைச் செய்வதாலோ பெற முடியாது.அதிக பட்சம் அவை மனத்திருப்தியை மட்டுமே தர முடியும். இறைவன் பால் உங்களது ப்ரேமை எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக ஆனந்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்களுள் ப்ரேமை குறையும் போது,உங்களது சந்தோஷமும் அதே அளவு குறைந்து விடும்.எனவே நீங்கள் உங்களது இதயத்தை இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையினால் நிரப்ப வேண்டும். தன்னலமும், தற்பெருமையும் அதனுள் முன்னரே நிரம்பி இருக்குமானால், ப்ரேமை உங்களது இதயத்தில் நுழைய முடியாது.எனவே, உங்களது அற்பமான சுயத்தன்மையை மறந்து விட்டு, இறைவன் பால் உங்களது எண்ணங்களைச் செலுத்துங்கள்.நீங்கள் இறைவனை நேசித்தால், எங்கும் இறைவனைக் காண்பீர்கள். அனைத்து ஆன்மீக சாதனைகளின் சாரமும் ப்ரேமையில் தான் குடி கொண்டுள்ளது.
இறைவனது ஒரே சொத்து ப்ரேமையே;அதை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது; அது இதயத்திலிருந்து ஊற்றெடுப்பதாகும் - பாபா