azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no God other than Truth. What is the difference between Truth and fact? You may put on a coat today and wear a different dress tomorrow. This is not Truth, it is only a fact, because it is subject to change. But Truth always remains the same. The Gita refers to Truth asRitham. So Truth is not reporting what you see, hear, and experience. What you see and hear is worldly truth. It is not Truth in the strict sense of the word. It is only external truth (pravritti satyam). But the inward Truth (nivritti satyam) remains the same in the past, present, and the future. In this world of plurality, there is the underlying principle of unity. Of all the numbers 1,2, 3, 4.. the most important number is 1. AIl the other numbers are mere modifications of the number 1. 1 1 becomes 2. 9–1 becomes 8. Thus 1 forms the basis for all the numbers. This is the unity in multiplicity, this Unity is the Truth. (Divine Discourse, Sep 11, 1988.)
Always remember these three facts in your mind: Trust not the world. Never Forget God.
Do not fear death. - Baba
சத்தியத்தைத் தவிர கடவுள் எதுவுமில்லை.சத்தியத்திற்கும், உண்மைக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் இன்று ஒரு கோட்டை அணியலாம்,நாளை வேறு ஒரு உடையை அணியலாம்.அது சத்தியமில்லை, அது உண்மையே 1,2,3,4 என்ற எணகளில் ஏனெனில் அது மாறக் கூடியது.ஆனால் சத்தியம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். ஸ்ரீமத் பகவத் கீதை சத்தியத்தை '' ரிதம்'' என்கிறது. எனவே, நீங்கள் காண்பது, கேட்பது மற்றும் அனுபவிப்பதை எல்லாம் அறிவிப்பது சத்தியமல்ல. நீங்கள் காண்பதும், கேட்பதும் உலகியலான சத்தியங்கள்.அவை சத்தியம் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவை அல்ல.அது வெளி உலகிலான சத்தியம் ( ப்ரவிருத்தி சத்யம்).ஆனால், உள்ளார்ந்த சத்யம் (நிவ்ருத்தி சத்யம்)என்பது, கடந்த, நிகழும் மற்றும் எதிர் காலங்களிலும் மாறாது இருப்பதாகும். எண்ணற்றவை நிறைந்த இந்த உலகில், ஒரே ஒரு அடிப்படையான ஒற்றுமைத் தத்துவம் உள்ளது. 1,2,3,4 என்ற எண்களில், மிகவும் முக்கியமான எண் 1.அனைத்து பிற எண்களும் அதன் வெறும் மாற்றங்களே. 1 1, என்பது 2 ஆகிறது. 9-1 என்பது 8ஆகிறது. எனவே, 1 என்ற எண்ணே அனைத்து எண்களுக்கும் அடிப்படை ஆதாரமாகிறது. இதுவே வேற்றுமையில் ஒற்றுமை, அந்த ஒற்றுமையே சத்யம்.
இந்த மூன்று உண்மைகளை நினைவில் கொள்ளுங்கள் - உலகை நம்பாதீர்கள், இறைவனை ஒருபோதும் மறக்காதீர்கள், மரணத்திற்கு அஞ்சாதீர்கள் - பாபா