azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

No religion ever preached enmity amongst faiths. It is the narrow-mindedness in individuals that gives room for conflicts and differences. Truly speaking, there can be no scope for any such disputes. For example, the word ‘Islam’ means surrender and peace – signifying surrender to God, and a peaceful life with fellow beings. Two words in Quran are important –SalaatandZakaat; Salaat means adoring God with steadfast devotion,Zakaatmeans charity to the needy and destitute, and helping fellow beings. Ancient Hindus lived with the motto, “May all the beings in all the worlds be happy” (Lokah Samastha Sukhino Bhavanthu) and “Help Ever, Hurt Never” (Paropakarayah punyaya, papaya para peedanam). Treating such aphorisms as their life breath, people of all religions lived with amity and harmony in the past. They considered truth, peace, love and forbearance as their very life breath. (My Dear Students, Vol 2, Ch 16, Jul 23, 1989.)
Believe that God resides in all beings. Speak such words as would spread goodness,
truth and beauty. – Baba
எந்த மதமும், மதங்களுக்கு இடையில் த்வேஷத்தை போதிக்கவில்லை. மனிதர்களுள் உள்ள குறுகிய மனப்பாங்கே மோதல்களுக்கும், வித்தியாசங்களுக்கும் இடம் அளிக்கிறது.உண்மையைச் சொல்லப் போனால், இத்தகைய எந்த பூசல்களுக்கும் வாய்ப்பே கிடையாது.உதாரணமாக, '' இஸ்லாம் '' என்ற வார்த்தைக்கு சரணாகதி மற்றும் சாந்தி என்று பொருள்- இறைவனிடம் சராணகதி மற்றும் பிறர மனிதருடன் ஒரு சாந்தி மயமான வாழ்க்கை நடத்துதல் என்பதைக் குறிக்கிறது. புனித குரானில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை - ஸலாத் மற்றும் ஜகாத்; ஸலாத் என்றால் இறைவனை தளராத பக்தியுடன் போற்றுதல்; ஜகாத் என்றால் ஏழை எளியவருக்கு தானம் வழங்கி, சக மனிதர்களுக்கு உதவுதல். பண்டைய கால இந்துக்கள்'' அனைத்து உலகங்களிலும் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் இன்புற்று இருக்கட்டும் ( லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து) மற்றும் '' எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் தீங்கிழைக்காதீர்கள்''(பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடனம்) என்ற கோட்பாடுகளுடன் வாழ்ந்தார்கள். இத்தகைய நீதி மொழிகளை தங்களது உயிர் மூச்சாகக் கொண்டு, அனைத்து மதத்தினரும் கடந்த காலத்தில் இணக்கம் மற்றும் இசைவுடன் வாழ்ந்தார்கள். அவர்கள் சத்யம்,சாந்தி,ப்ரேமை மற்றும் சகிப்புத் தன்மையை தங்களது சுவாஸமாகவே கொண்டிருந்தார்கள்.
இறைவன் அனைத்து ஜீவராசிகளுள்ளும் உறைகிறான் எனபதில் நம்பிக்கை வையுங்கள்.சத்யம், சிவம், சுந்தரத்தைப் பரப்பும் வார்ததைகளையே பேசுங்கள்-பாபா