azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

“Oh tongue, you are the one selected to enjoy the sweet taste; you speak truth that symbolises sacrifice! You respect yourself and others. Without leaving your home, you attend to your work, without friendship or friction with your neighbours. How sweet are the words you speak? Oh noble one, you recite lovely poems and sing beautiful songs. When any tasty dish or fruit is given to you, you don’t retain it, but immediately send it down the gullet to the stomach. When anything bitter is given, you spit it out, saving the stomach from hardships. You are selfless, derive much joy in sharing and are the epitome of tolerance. You live amidst 32 sharp teeth, but intelligently and tactfully you conduct yourself without getting a single cut. Please don’t slip and utter inappropriate words at any time!” Thus, remind the tongue about its noble qualities and teach it never to lose its reputation by criticising others. (My Dear Students, Vol 5, Ch 2, Mar 9, 1993.)
When the tooth accidentally bites your tongue, do you get angry and break the teeth that hurt it so? No! For, the teeth and tongue are both yours! Similarly, the one who hurts you and you, are both limbs of the same body called God. - Baba
"ஏ நாக்கே!இனிமையான சுவையை அனுபவிப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டவன் நீ;தியாகத்தின் அறிகுறியான சத்தியத்தைப் பேசுபவனும் நீயே!நீ தன்னையும் மதித்து மற்றவர்களையும் மதிக்கிறாய்.வீட்டை விட்டு வெளியில் செல்லாது, பக்கத்து வீட்டினரோடு ,எந்த நட்போ அல்லது உரசலோ இன்றி உனது பணியை ஆற்றுகிறாய்.நீ பேசும் வார்த்தைகள் தான் எவ்வளவு இனிமையானவை? உன்னதமானவனே !நீ சிறப்பான கவிதைகளை ஓதி, இனிமையான பாடல்களைப் பாடுகிறாய். எப்போதாவது ஏதாவது சுவையான பதார்த்தமோ அல்லது பழமோ உனக்குக் கொடுக்கப் பட்டால், நீயே அதை வைத்துக் கொள்ளாது, உடனேயே அதை உணவுக் குழாயின் வழியாக வயிற்றிற்கு அனுப்பி விடுகிறாய்.கசப்பான ஏதாவது கொடுக்கப் பட்டால், அதை வெளியில் துப்பி, வயிற்றைக் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றுகிறாய்;நீ தன்னலமற்றவன்,பிறருடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைபவன்; மேலும் சகிப்புத் தன்மையின் சிகரம் நீ. நீ, 32 கூர்மையான பற்களின் இடையில் வாழ்ந்தாலும்,புத்திசாலித்தனம் மற்றும் இங்கிதத்துடன், ஒரு கடி கூடப் படாமல் நடந்து கொள்கிறாய். தயவு செய்து தவறிக் கூட ஒரு போதும், முறையற்ற வார்த்தைகளைக் கூறி விடாதே." இவ்வாறு, நாவிற்கு அதன் உன்னத குணங்களை நினைவூட்டி, பிறரைக் குறை கூறுவதின் மூலம் தனது பெயரைக் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.
எப்போதாவது பற்கள் , தவறுதலாக நாக்கைக் கடித்து விட்டால்,அவ்வாறு காயப்படுத்திய பற்களை நீங்கள் உடைத்தா விடுகிறீர்கள்? இல்லையே! ஏனென்றால் பற்களும், நாவும் உங்களுடையது தானே. அதைப் போலவே, உங்களுக்குத் தீங்கு இழைத்தவரும், நீங்களும் இறைவன் எனும் ஒரே உடலின் அங்கங்களே - பாபா