azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Many feel proud of the enormous growth in education everywhere. Acquiring degrees at great cost and developing contempt for one’s parents out of intellectual pride is not a sign of higher education. Arrogance, envy and ostentation should have no place in an educated person. Humility is the hallmark of true education. The educated must serve people through sweat and toil. Education must inspire youth to offer service, to sacrifice and to help. It must not inspire youth to amass money as its goal, and to travel farther and farther to earn more and more of it. Accumulated money often breeds arrogance and its army of other vices. You cannot crave for peace and happiness and do things that bring unhappiness and worry. Having been born as human beings, you must try to rise above the level of animals and raise yourself to be truly Divine. (My Dear Students, Vol 2, Ch 15, Mar 1, 1981.)
Virtue is the sign of an educated person. - Baba
கல்வி எங்கும் மிகுந்த அளவில் வளர்ந்திருப்பதைப் பற்றி பலர் பெருமை கொள்கிறார்கள்.அதிக செலவில் பட்டங்கள் பெற்று விட்டு,அறிவின் மமதையின் காரணமாக,ஒருவரது பெற்றோர்கள் மீது அவமதிப்பைப் பெருக்கிக் கொள்வது உயர் கல்வியின் சின்னமாகாது. மமதை, பொறாமை மற்றும் படாடோபம் ஆகியவைகளுக்கு கற்ற ஒருவரிடம் இடம் இல்லை.பணிவே உண்மையான கல்வியின் முத்திரைச் சின்னம்.படித்தவர்கள் தங்கள் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கல்வி, இளைஞர்களை சேவை ஆற்றவும்,தியாகம் செய்யவும் , உதவி புரியவும், உத்வேகம் அளிக்க வேண்டும். அது இளைஞர்களுக்கு செல்வத்தைக் குவிப்பதையே அதன் குறிக்கோளாகச் செய்து, மேலும் மேலும் அதை ஈட்டுவதற்காக தூர தேசங்களுக்கு செல்ல, உத்வேகம் அளிக்கக் கூடாது. குவிக்கப் பட்ட செல்வம் பெரும்பாலும் மமதையையும், அதனது சேனைகளான பிற தீய குணங்களையும் வளர்க்கிறது. துக்கத்தையும், கவலைகளையும் தரும் செயல்களைச் செய்து விட்டு, நீங்கள் சாந்தி, சந்தோஷங்களுக்காக ஏங்க முடியாது. மனிதர்களாகப் பிறந்த பிறகு, மிருகங்களின் நிலையிலிருந்து மேலெழுந்து, உங்களை, நீங்களே உண்மையான தெய்வீக நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
நல்லொழுக்கமே கற்றவரின் அறிகுறி - பாபா