azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Ignorance has a very powerful influence on the mind. Arjuna said to Krishna, “The mind is very powerful, however it has a wavering nature.” Lord Krishna said, “A bee has the strength to drill a hole in the hardest variety of wood. However when it enters a lotus, if the lotus closes its petals, then even with all its might, the bee cannot come out of it. Similarly once the all-powerful mind comes to the lotus feet of the Lord it becomes powerless and surrenders. However potent or wavering one’s mind may be, it can be and must be controlled with spiritual practice (Sadhana). When Jesus was nailed in the Cross, his followers were deeply pained and in great grief. He said, “Just as this body had a dress, this body is just an attire for the soul. Do not grieve”. He taught his followers, “Do not harm anyone or hurt anyone. Treat everyone alike.” Everyone must practice these teachings. (My Dear Students, Vol 2, Ch 15, Mar 1, 1981.)
அறியாமை மனதில் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்ல ஒன்று. அர்ஜூனன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம், '' மனம் மிகவும் சக்தி வாய்ந்தது தான், ஆனால்,அது அலைபாயும் தன்மையைக் கொண்டது.'' என்றார்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ''ஒரு குளவிக்கு மிகவும் கடிமான மரத்தைக் கூடத் துளைத்து விடும் சக்தி இருக்கிறது,ஆனால் அது ஒரு தாமரைக்குள் புகுந்த பின் , தாமரையின் இதழ்கள் மூடிக் கொண்டு விட்டால், அது தன் முழுத் திறனையும் பயன்படுத்தினாலும், அதனால் வெளியில் வர முடியாது.அதைப் போலவே, அனைத்து சக்தியையும் கொண்ட மனம் பகவானின் பொற்பாத கமலங்களிடம் வந்து விட்டால், சக்தியிழந்து சரணாகதி அடைந்து விடுகிறது.'' என்றார்.எவ்வளவு சக்தி கொண்டதாகவோ, மிகவும் அலை பாய்வதாகவோ ஒருவரது மனம் இருந்தாலும், அதை ஆன்மீக சாதனையின் மூலம் கட்டுப்படுத்த முடியும்;கட்டுப் படுத்த வேண்டும்.ஏசு பகவானை சிலுவையில் அறைந்த போது, அவரது சீடர்கள் ஆழ்ந்த வேதனையுற்று, மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார்கள்.அவர் கூறினார், ''இந்த உடலுக்கு ஒரு ஆடை எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறே இந்த உடல் ஆத்மாவிற்கு ஒரு வெறும் மேலாடை தான். துயரம் கொள்ளாதீர்கள்.'' என்றார். அவர் தனது சீடர்களுக்கு, ''எவரையும் துன்புறுத்தவோ, அவர்களுக்கு தீங்கிழைக்கவோ செய்யாதீர்கள். அனைவரையும் ஒன்று போல நடத்துங்கள்.'' என போதித்தார்.ஒவ்வொருவரும் இந்த போதனைகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.