azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

We generally consider direct perception as the most important type of evidence. We are able to see our body, the number of hands, legs, eyes we have and so on. This is one type of proof. Consider another example: We boil milk. After heating, we add some yoghurt to it in the night and wake up the next morning to find that the whole milk has turned into curd (yoghurt). Though our eyes don’t see the transformation process, our own action provides us the proof and we don’t need anyone else to convince us that the change from milk to curd has really occurred, though the change process was not visible directly to our eyes. So too, though the Soul (Atma) is invisible, and we cannot see it, we must have faith in its existence. Several great sages and saints have had the direct experience of Divinity in their present lives and have conveyed the teachings to us. (My Dear Students, Vol 2, Ch 15, Mar 1, 1981)
நாம் சாதாரணமாக,நேரடியான அனுபவத்தையே மிகவும் முக்கியமான சான்றாகக் கருதுகிறோம்.நமது உடல், நமக்கு இருக்கும் கை, கால் மற்றும் கண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நம்மால் காண முடிகிறது. இது ஒரு விதமான நிரூபணம்.மற்றும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் பாலைக் காய்ச்சுகிறோம். காய்ச்சிய பிறகு, இரவில்,அதில் கொஞ்சம் தயிரைச் சேர்க்கிறோம்; காலையில் எழுந்து பார்த்தால் பால் முழுவதும் தயிராக மாறியிருப்பதைக் காண்கிறோம்.நமது கண்கள் இந்த மாற்றம் நிகழ்ந்த முறையைக் பார்த்திருக்கா விட்டாலும், நமது செயல், நமக்கு நிரூபணத்தை அளிக்கிறது; மாற்றம் நிகழ்ந்த முறை நம் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், பால் தயிராக உண்மையிலேயே மாறி விட்டது என்று நம்மை நம்ப வைக்க எவரும் தேவையில்லை.அதைப் போலவே, ஆத்மா மறைவாக இருந்தாலும், நம்மால் அதைப் பார்க்க இயலாவிட்டாலும், அது இருக்கிறது என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பல தலை சிறந்த ஆன்றோர்களும், முனிவர்களும் தங்களது வாழ் நாளில் தெய்வீகத்தை ப்ரத்யக்ஷமாக அனுபவித்து, அவர்களது போதனைகளை நமக்கு அளித்துள்ளார்கள்.