azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Is there any object in the world without a creator? Consider a loud speaker. It has the power to broadcast sound, way beyond any individual’s voice and must take someone with required knowledge and skill to design and produce it. He or she may be in Germany, Switzerland or Japan, and perhaps invisible to you! Without that person, would this loudspeaker have come into existence? No! Similarly for everything that you enjoy in this world, there is a Creator. The stars that twinkle, the Sun and the Moon that illumine the world have been created by a Supreme Infinite Power. It is obvious to us that no ordinary person can create these super objects and ensure they are still working, after billions of years. Scriptures (Vedas) describe to us that this Super Power isAprameya(One beyond description, beyond all proofs and limitations). The primary objective of every being in this Universe must be to seek and understand this Infinite Power. (Divine Discourse, March 1, 1981)
சிருஷ்டி கர்த்தா இல்லாத பொருள் ஏதேனும் இந்த உலகில் இருக்கிறதா? இந்த ஒலி பெருக்கியையே எடுத்துக் கொள்ளுங்கள்.இதற்கு தனிப் பட்ட மனிதரின் குரலுக்கும் அப்பாற்பட்டு, ஒலியை அதிகப்படுத்தி பரப்பும் திறன் உள்ளது;இதற்கான அறிவும், திறனும் கொண்ட ஒருவர் இருந்தால் தானே , இது உருவாக முடியும்.அவனோ அல்லது அவளோ, ஜெர்மனியிலோ அல்லது ஸ்விட்ஸர்லாந்திலோ அல்லது ஜப்பானிலோ, ஏன் உங்கள் கண்களுக்குப் புலப்படாமலோ இருக்கலாம்!அந்த மனிதர் இல்லாமல், இந்த ஒலி பெருக்கி உண்டாகியிருக்குமா? இல்லை! அதைப் போலவே நீங்கள் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிருஷ்டி கர்த்தா இருக்கிறார்.மின்னும் நக்ஷத்திரங்கள், உலகிற்கு ஒளியூட்டும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய அனைத்தும் ஒரு தலை சிறந்த, அளவற்ற ஆற்றலால் தான் உருவாகியுள்ளன. எந்த ஒரு சாதாரண மனிதராலும் மிக மேன்மையான இந்த பொருட்களை உருவாக்கி,கோடிக்கணக்கான வருடங்களுக்கு அப்புறமும், அவை இயங்கிக் கொண்டு இருக்குமாறு செய்ய இயலாது என்பது நமக்குப் புலனாகிறது. வேதங்கள் இந்த தலை சிறந்த சக்தியை ' அப்ரமேயா''( அதாவது விவரிக்க முடியாத,பிரமாணங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்று) என நமக்கு விளக்குகின்றன.இந்த அளவற்ற சக்தியை நாடி, புரிந்து கொள்வதே இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியின் தலையாய கடமையாகும்.