azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God descends for the people and among the people with love, compassion and affection, and mixes with the Individual Consciousness (Jeeva Prajna) so that Divine Consciousness (Deva Prajna) may be attained. Such rare opportunities are bestowed upon individuals as a result of the good deeds of past several lives. A Guru is truly like God. Guru teaches in order to build the character of the devotee, so he or she can have a good future. A good devotee/student is he or she, who has utmost devotion towards their Guru and surrenders at their Master’s feet. Arjuna personified an ideal devotee who surrendered completely to his Master, Lord and Guru, Sri Krishna. Arjuna said to Krishna, “I will do whatever You tell me to do”. This is a classic act, an example of complete surrender to God. Students today must follow Arjuna as their role model and achieve complete surrender of their lives to service and betterment of the society. (Divine Discourse, 25 Dec 1980.)
இறைவன் மக்களுக்காக, மக்கள் மத்தியில் அவதாரம் எடுத்து, ப்ரேமை, கருணை மற்றும் பரிவோடு இ(ர)றங்கி வந்து, தனிப்பட்ட ஜீவ உணர்வு ( ஜீவ ப்ரக்ஞா) கொண்ட மனிதர்களுடன் கலந்து பழகுவது , அவர்களுக்கு தெய்வீக உணர்வு ( தேவ ப்ரக்ஞா) கிட்டுவதற்காகவே.இப்படிப் பட்ட அரிய வாய்ப்புக்கள் மனிதர்களுக்கு, அவர்கள் பல பிறவிகளில் ஆற்றிய நற்கருமங்களின் பலனாகவே, அளிக்கப் படுகிறது.ஒரு குருவும் இறைவனைப் போன்றவரே. குரு,தனது சீடரின் நற்குணங்களை வளர்ப்பதற்காக போதனைகள் செய்கிறார்; அதன் மூலம் அவனோ அல்லது அவளோ நல்ல எதிர்காலத்தைப் பெற முடியும்.தங்களது குரு மீது பெரும் பக்தி கொண்டு, தங்களது குருவின் பாதார விந்தங்களின் சரணடையும் அவனோ அல்லது அவளோ தான், ஒரு நல்ல பக்தர்/சீடர் ஆவார் .அர்ஜூனன், தனது இறைவன் மற்றும் குருவான பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பரிபூரண சரணாகதி அடைந்த ஒரு இலட்சிய பக்தனாகத் திகழ்ந்தான்.அர்ஜூனன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம்,'' நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே நான் செய்வேன்.'' எனக் கூறினான்.இந்த அற்புதமான செயல், இறைவனிடம் பரிபூரண சரணாகதிக்கான ஒரு தலைசிறந்த எடுத்துக் காட்டு. மாணவர்கள் இன்று அர்ஜூனனை தங்களது முன்னோடியாகக் கொண்டு,சமுதாயத்தின் சேவை மற்றும் வளர்ச்சிக்காக, தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.