azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Many of you do not consider the sacred values ofSathya, Dharma, Shanthi, PremaandAhimsaas inner current that are present within you. In fact, they form the basic foundation of human life. Without the basic fundamentals, the more knowledge you acquire, the greater and longer you continue to be a fool, if you do not invest effort to realize your true nature. Truth is present and latent within everyone. It is a precious gift from God. Whether you recognize these facts or not, and even if you consider them as irrelevant, these facts remain. Hence now onwards, you must install Truth deeply in your heart. Love is the natural fruit of developing Truth. If you grow in truthfulness, then as a result, Love blossoms from within. Along withSathyaandPrema, comesAhimsa. Truth sustainsAhimsaor Non-Violence. You will find that the value of Non-violence is often absent, in every person, wherever and whenever Love is absent. (Divine Discourse, June 7, 2007)
உங்களில் பலர் புனிதப் பண்புகளான சத்யம், தர்மம்,சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை ஆகியவை உங்களுக்குள்ளேயே உயிரோட்டமாக இருப்பதாகக் கருதுவதில்லை.உண்மையில் இவையே மனித வாழ்வின் அடிப்படை அஸ்திவாரங்களாக இருக்கின்றன.இந்த அடிப்படை ஆதாரங்கள் இன்றி, எந்த அளவு அதிக அறிவை நீங்கள் சேர்த்துக் கொள்கிறீர்களோ, அதை விட அதிகமாக, அதிக காலம் நீங்கள் அறிவிலிகளாகவே இருப்பீர்கள், உங்களது உண்மை நிலையை உணர நீங்கள் பாடுபடவில்லை என்றால்.சத்யம் ஒவ்வொருவர் உள்ளும் புதைந்து இருக்கிறது.அது இறைவன் அளித்த அரிய பரிசாகும். நீங்கள் இந்த உண்மைகளை உணர்ந்தாலும்,உணராவிட்டாலும், அவை பொறுத்தமற்றவை எனக் கருதினாலும் கூட, இந்த உண்மைகள் இருக்கத் தான் செய்கின்றன.எனவே, இப்போதிலிருந்து சத்தியத்தை உங்கள் இதயத்தில் ஆழமாக பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள்.சத்யத்தை அபிவிருத்தி செய்யும் போது கிடைக்கும் இயற்கையான கனி ப்ரேமையாகும். சத்யத்தில் நீங்கள் வளரும்போது, அதன் விளைவாக, ப்ரேமை உள்ளிருந்து மலருகிறது. சத்யம் மற்றும் ப்ரேமையோடு வருவது அஹிம்ஸை.சத்யம் அஹிம்ஸையை பேணுகிறது. ஒவ்வொரு மனிதரிடமும், எங்கு, எப்போது ப்ரேமை இல்லையோ, நீங்கள் அஹிம்ஸை என்ற பண்பு , அங்கு பெரும்பாலும் இருப்பதில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.