azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Love (Prema) cannot be affected or modified by considerations of caste or creed or religion; it cannot be tarnished by envy, malice or hate. Preserve Love from being poisoned by these evils; endeavor to cultivate hatred-lessness and distinction-free feelings. The root of all religions, the substance of all scriptures, the rendezvous of all roads, the inspiration of all individuals is the Principle of Love (Prema). It is the `firmest foundation for every human being's mission of Life. It is the Light that ensures world peace and prosperity. Fill every word of yours with Love. The word that emerges from your tongue should not stab like the knife, nor wound like an arrow, or hit like the hammer. It has to be a foundation of sweet nectar, a counsel of consoling spiritual wisdom (Vedantic), and a soft path of blossoms; it must shower peace and joy. (Divine Discourse, 2 July 1985)
ப்ரேமை என்பது,ஜாதி,குல மற்றும் மதத்தின் காரணங்களால் பாதிக்கப் படுவதோ அல்லது மாற்றப்படுவதோ இல்லை;அதை,பொறாமை,வன்மம் அல்லது வெறுப்பால் மாசடையச் செய்ய முடியாது.இந்தத் தீய குணங்களால், ப்ரேமை விஷத் தன்மை அடையாமல் பாதுகாவல் செய்யுங்கள்;வெறுப்பற்ற மற்றும் பேத பாவங்கள் அற்ற உணர்வுகளை வளர்ததுக் கொள்ள பாடுபடுங்கள்.அனைத்து மதங்களின் ஆணி வேர், அனைத்து சாஸ்தரங்களின் சாரம்,அனைத்து மார்க்கங்களும் சந்திக்கும் இடம், அனைத்து மனிதர்களுக்கும் உத்வேகம் அளிப்பது ப்ரேம தத்துவமே.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக் குறிக்கோளின் அசைக்க முடியாத அஸ்திவாரம் அதுவே. உலக சாந்தி மற்றும் சௌகரியங்களை உறுதி செய்யும் ஜோதி அதுவே. உங்களது ஒவ்வொரு வார்த்தையையும் ப்ரேமையால் நிரப்புங்கள். உங்களது நாவிலிருந்து வரும் வார்த்தை கத்தி போலக் குத்தவோ,அம்பைப் போல காயப் படுத்தவோ, அல்லது சம்மட்டியைப் போல அடிக்கவோ கூடாது. அது இனிய அமுதத்தின் ஒரு அஸ்திவாரமாக,மனதிற்கு இதமூட்டும் ஒரு வேதாந்த ஞான அறிவுரையாக, மென்மையான ஒரு மலர் பாதையாக இருக்க வேண்டும்; அது சாந்தி, சந்தோஷங்களைப் பொழிய வேண்டும்.