azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

To hate or injure other beings is as bad as hating and injuring oneself. The reason being that the injurer is as much a living being with God as the core, as the injured is. Until you become aware of your own Divinity (Deva-tatwa) so long as you are conscious of your distinct individuality (Jiva-tatwa) - till you feel you are you and God is God, you struggle, with some attitudes and objectives. This is called the Sadhaka stage. During that stage, you must endeavour to equip yourself with the qualities of love, sympathy and compassion. For, without these,YogaandJnana(wisdom) cannot be secured. Love is vital, it is divine. To render an act fit to be offered to God and pure enough to win His Grace, it must be a manifestation of Love. The brighter the manifestation, the nearer you are to God. ( Divine Discourse, 29 July 1969.)
பிறரை வெறுப்பதோ அல்லது அவர்களுக்குத் தீங்கு இழைப்பதோ, உங்களையே வெறுப்பது மற்றும் உங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்வதன் அளவு தீமையானதாகும். பாதிப்பவரும், பாதிக்கப்பட்டவர் போன்றே இறைவனைத் தனது அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜீவன் என்பதே இதற்குக் காரணம். உங்களது தெய்வீகத்தை(தேவ-தத்துவம்) உணரும் வரை, நீங்கள் ஒரு தனிப்பட்ட ஜீவன்( ஜீவ-தத்துவம்) என்ற உணர்வு இருக்கும் வரை- அதாவது நீங்கள் வேறு, இறைவன் வேறு என்று எண்ணும் வரை, நீங்கள் சில மனப்பாங்குகள் மற்றும் குறிக்கோள்களுடன், போராடிக் கொண்டு தான் இருப்பீர்கள். இது சாதகனது நிலை எனப் படுகிறது.இந்த நிலையில் நீங்கள், உங்களுள் ப்ரேமை, பரிவு மற்றும் கருணை என்ற குணங்களை வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும்.ஏனெனில் இவை இல்லாமல் யோகமும், ஞானமும் சித்திக்காது. ப்ரேமை அத்தியாவசிமானது,அது தெய்வீகமானது. ஒரு செயலை இறைவனுக்கு அற்பணிக்கப் படத் தகுதியானதாகவும், அவனது அருளைப் பெற்றுத் தரும் அளவுக்குத் தூய்மையானதாகவும் ஆக்க வேண்டும் எனில், அது ப்ரேமையின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும். இந்த வெளிப்பாடு எந்த அளவு ப்ரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவு நீங்கள் இறைவனுக்கு அருகாமையை அடைகிறீர்கள்.