azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The Gita offers valuable advice to help one swim across the sea of sorrow. Bear no ill-will against any living being (Adweshta Sarva Bhoothaanaam), always be engaged in promoting the wellbeing of all (Sarva Bhootha Hithe Rathaah), and consider foe and friend alike (Samah Shathrou Cha Mithre Cha) - these are jewels contained in the Gita, highlighting the means to develop Universal Love. By declaring that none should have ill feeling towards the entire world of living beings, the Gita is teaching an invaluable lesson that the Divine is in all beings and objects, as an active illumining Principle, appropriately called Atma. The Vedic assertions also firmly establish this profound Truth. All are enveloped in God (Ishaavasyamidham Sarvam); the inner core of all beings is He (Sarva Bhootha antharaatma). (Divine Discourse, 29 July 1969)
ஸ்ரீமத் பகவத் கீதை ,ஒருவர் துயரம் எனும் சாகரத்தைக் கடப்பதற்கு உதவும் விலை மதிப்பற்ற அறிவுரையை வழங்குகிறது. '' அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்'' எந்த ஒரு ஜீவராசியின் மீதும் வெறுப்பு கொள்ளாதீர்கள்,'' ஸர்வ பூத ஹித ரத:'' எப்போதும் அனைவரது நலனைப் பேணுவதில் ஈடுபடுங்கள், '' ஸம ஸத்ரௌ ச மித்ர ச '' நண்பனையும், பகைவனையும் ஒன்று போல பாவியுங்கள் - இவை அனைத்தும், ஸ்ரீமத் பகவத் கீதையில், பிரபஞ்ச மயமான ப்ரேமையை வளர்த்துக் கொள்வதற்கான உபாயங்களை எடுத்துக் காட்டும் ஆபரணங்கள். ஒருவருக்குக் கூட, அனைத்துலக ஜீவராசிகளின் மீது த்வேஷம் இருத்தல் கூடாது என அறிவுறுத்துவதன் மூலம், ஸ்ரீமத் பகவத் கீதை, தெய்வீகம், அனைத்து ஜீவராசிகள் மற்றும் பொருட்களில், ஆத்மா என பொருத்தமாக அழைக்கப்படும், உயிரூட்டும் தத்துவமாக ஒளிருகிறது என்ற விலை மதிப்பற்ற பாடத்தைக் கற்பிக்கிறது. மறை நூல்களும் இந்த மகத்தான சத்தியத்தை உறுதிப் படுத்துகின்றன.அனைவரும் தெய்வத்தினுள் உறைபவர்களே ( ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம்); அனைத்து ஜீவராசிகளின் அந்தராத்மா இறைவனே ( ஸர்வ பூத அந்தராத்மா).