azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

When Yajnavalkya resolved to go into the forest to live as an ascetic, he called his two wives before him and proposed to divide the riches he had earned between them. Before accepting her share, Maitreyi asked her husband whether the riches will help her to realise Truth and achieve immortality. When she understood that they will not, and in fact they are mere hindrances, she refused to be burdened. Nachiketa refused the gifts of empire, affluence, and years of healthy life. Prahladha taught the same lesson to his playmates. Buddha solved the mystery of suffering through renunciation of attachment as the first step in hisSadhana. All of them had implicit faith in the existence of God; their lives revolved on the axis of that faith. (Divine Discourse, 19 July 1970.)
யாக்ஞவல்க்யர், எப்போது காட்டிற்குச் சென்று, ஒரு சந்நியாசியைப் போல வாழ முடிவு செய்தாரோ,, அப்போது அவர் தன் இரு மனைவியரையும் தன் முன் அழைத்து, அவர் ஈட்டிய செல்வங்களை சமமாக, இருவருக்கும் இடையில் பங்கிட்டுக் கொள்ளுமாறு பணித்தார். தனது பங்கை ஏற்றுக் கொள்வதற்கு முன் மைத்ரேயி தனது கணவரை, இந்த செல்வங்கள் அவள் நித்ய சத்தியத்தை உணரச் செய்து அமரத்துவம் அடைவதற்கு உதவுமா என வினவினார்.அவை அவ்வாறு உதவாததோடு மட்டும் அல்லாது, அதற்கு வெறும் தடையாகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவுடன் அவற்றின் சுமையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். நசிகேதர் சாம்ராஜ்யம்,செல்வம் மற்றும், பல காலம் நல்ல ஆரோக்யம் ஆகிய பரிசுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ப்ரஹலாதனும் இதே பாடத்தை தனது நண்பர்களுக்குப் புகட்டினான். புத்த பகவானும் துயரத்தின் மர்மத்தை, பற்றுதலை விடுவதே தனது ஆன்மீக சாதனையின் முதல் படி என்பதன் மூலம் கண்டு பிடித்தார்.இந்த அனைவரும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தெளிவாக இருந்தனர்; அவர்களது வாழ்க்கை அந்த நம்பிக்கை என்ற அச்சிலேயே, சுழன்று கொண்டு இருந்தது.