azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Silence is the first step in Sadhana, which makes the other steps easy. It promotes self-control, lessens chances of anger, hate, malice, greed and pride. Besides, you can hear His footsteps, only when silence reigns in the mind. Cleanliness opens the door to Godliness. Inner and outer cleanliness are essential to install God within your heart. Service saves you from the agony you get when another suffers; it broadens your vision, widens your awareness, and deepens your compassion. All the waves on the sea originate from the same sea and also merge in it. Seva teaches you to be firm in this knowledge. Practice Love. Practice hatelessness. None must be looked down upon as secondary, inferior or unimportant. Everyone has their allotted role in the drama designed by the Almighty. Do not slight, insult or injure anyone; for, He is in every being and your slight thus becomes a sacrilege. (Divine Discourse, 19 July 1970.)
மௌனமே,ஆன்மீக சாதனையின் முதல் படியாகும்;அது மற்ற படிகளை எளிதாக்குகிறது. அது சுய கட்டுப்பாட்டை வளர்த்து,கோபம், வெறுப்பு, க்ரோதம், பேராசை மற்றும் அகந்தை ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கிறது. மேலும், மௌனம் உங்கள் மனதில் குடி கொண்டு இருந்தால் தான் இறைவனது காலடி ஓசையை நீங்கள் கேட்க முடியும். தூய்மை, இறைத் தன்மைக்குவழி வகுக்கிறது. அகம் மற்றும் புறத் தூய்மை,உங்கள் இதயத்தில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வதற்கு இன்றியமையாதவை. சேவை, பிறர் துன்பப்படும்போது உங்களுக்கு ஏற்படும் வேதனையிலிருந்து உங்களைக் காக்கிறது;அது உங்களது திருஷ்ட்டியை விசாலமாக்கி,உணர்வுகளை விரிவடையச் செய்து, உங்களது இரக்க உணர்வை ஆழமாக்குகிறது.கடலின் அனைத்து அலைகளும்,அதே கடலிலிருந்து தோன்றி, அதிலேயே சங்கமமாகின்றன. சேவை இந்த அறிவில் உறுதியாக இருக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறது.அன்பைக் கடைப் பிடியுங்கள். வெறுப்பின்மையைக் கடைப் பிடியுங்கள்.எவரையும் இரண்டாம் பக்ஷமாகவோ, மட்டமானவராகவோ அல்லது துச்சமாகவோ கருதக்கூடாது.இறைவன் வடிவமைத்துள்ள நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு என்று கொடுக்கப் பட்டுள்ள பங்கு உள்ளது. எவரையும், இகழவோ, அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ செய்யாதீர்கள்; ஏனெனில் இறைவன் ஒவ்வொரு ஜீவராசியினுள்ளும் உறைகிறான்;உங்களது இகழ்ச்சி, அவனது புனிதத்துவத்தையே அவமதிப்பது போலாகும்.