azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The scriptures declare that body is the temple and God is installed therein. Hence, consider your body as a vessel for cooking food, given on loan for hosting the festival of life. Can we return it to God, the Owner, in a worse condition? Should we not scrub it clean and return it bright and free from rust and dust? When the festival of life began, we received a pure, fresh and bright body from Him, innocent of evil. We have now inflicted dents, leaks and other signs of damage, through lust, greed, hatred, anger and envy. Do not return His property in poor condition. You must return it to Him, as pure as He gave it, to be most worthy of His Grace. Remember the purpose of your birth; and leverage your full potential and capability to achieve it. Wear the garland of devotion around your neck and saturate your thought, word and deed with Divine Love. (Divine Discourse, 22 Jan 1982) BABA
மறை நூல்கள் உடலே கோவில் என்றும் இறைவன் அதில் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளான் என்றும் பறை சாற்றுகின்றன.எனவே,வாழ்க்கை எனும் விழாவை நடத்துவதற்கு கடனாகத் தரப்பட்ட சமயல் பாத்திரமாக உங்கள் உடலைக் கருதுங்கள்.அதன் சொந்தக்காரரான இறைவனிடம் அதை முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் நாம் திருப்பித் தர முடியுமா?அதை நாம் சுத்தமாகத் தேய்த்து,பள பள என்று, துரு மற்றும் தூசி இன்றி திருப்பித் தர வேண்டாமா? வாழ்க்கை எனும் விழாத் துவங்கியபோது, நாம் இறைவனிடமிருந்து, தூய்மையான,புதிதான மற்றும் பிரகாசமான, தீமைகள் அற்ற உடலைப் பெற்றோம். நாம் அதில் காம, க்ரோத, லோப, மோஹ, மத , மாத்ஸர்யங்கள் மூலம் நசுங்கள்.ஓட்டைகள் மற்றும் பலவிதமான சேதத்தின் அறிகுறிகளை உண்டாக்கி விட்டோம். அவனது சொத்தை, தாழ்மையான நிலையில் திருப்பித் தராதீர்கள்.அவன் எவ்வளவு தூய்மையான நிலையில் அதைக் கொடுத்தானோ, அதே போன்ற தூய நிலையில், அவனது அருளுக்கான தலை சிறந்த பாத்திரமாக. அதை நாம் திருப்பி அளிக்க வேண்டும். உங்களது வாழ்வின் குறிக்கோளை நினைவில் கொண்டு,உங்களது முழுத் திறன் மற்றும் சக்தியை, அதை அடைவதற்காக பயன்படுத்துங்கள். பக்தி எனும் மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, உங்களது எண்ணம், சொல், மற்றும் செயலை தெய்வீக அன்பினால் நிரப்புங்கள்.