azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

It is often declared that knowledge is power. No! No! Character is power. Nothing can be more powerful on earth than character. Riches, scholarship, status, authority, etc. are all frail and flimsy before it. There is no dearth of books today; nor is there lack of gurus. Educational institutions spread knowledge everywhere. The Sun of Knowledge (Jnaana Bhaskara) is showering His rays in plenty to all alike. But, one can hardly find those who have imbibed the nectarous wisdom thus offered and are dwelling in the ecstasy it can confer. The mountain range with lust, anger, hatred, envy and pride as the peaks, shuts out the splendor of the Sun. Charity, compassion, fortitude, sympathy, and sacrifice, arise from the higher levels of consciousness while opposite tendencies breed in the lower levels. Remember, a strong virtuous character cannot be earned from any book; it is earned only through intimate involvement with society.(Divine Discourse, 22 Jan 1982.)
அறிவே சக்தி எனப் பெரும்பாலும் பறைசாற்றப் படுகிறது. இல்லவே இல்லை! நற்குண சீலமே சக்தியாகும். இந்த பூமியில் நற்குண சீலத்தை விட அதிக சக்தி வாய்ந்தது எதுவுமே இல்லை.தனம், பாண்டித்யம்,அந்தஸ்து, அதிகாரம் போன்றவை எல்லாம் அதன் முன் துச்சமே.இன்று புத்தகங்களுக்கும் குறைவில்லை; குருமார்களுக்கும் குறைவில்லை, கல்வி நிறுவனங்கள் அறிவை எங்கும் பரப்புகின்றன. ஞானம் எனும் சூரியன்( ஞான பாஸ்கரா) அனைவர் மீதும் தனது கிரணங்களை ஒரே மாதிரியாக அபரிமிதமாகப் பொழிகிறார். ஆனால்,இவ்வாறு தரப்படும் அமுத மயமான ஞானத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து அது தரும் பரவசத்தில் ஆழ்ந்திருப்பவர்களை காண்பது அரிதாகவே உள்ளது. காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மற்றும் மாத்ஸர்யம் என்ற சிகரங்களைக் கொண்ட மலைத் தொடரானது ஞான சூரியனின் காந்தியை மறைத்து விடுகின்றன. ஈவு,இரக்கம், மனோபலம், பரிவு, மற்றும் தியாகம் ஆகியவை உணர்வின் உயர் நிலைகளிலிருந்து தோன்றுபவை; அதே சமயம் அவற்றிற்கு எதிர் மறையானவை உணர்வின் தாழ்நிலைகளிலிருந்து உருவாகின்றன.ஒரு வலிமையான நற்குண சீலத்தை புத்தகங்களிலிருந்து பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அதை சமுதாயத்துடன் நெருக்கமாக ஒட்டி உறவாடுவதன் மூலமே பெற முடியும்.