azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You must regard the prosperity and joy of others in the community as your own. Only then will India or any other country deserve prosperity and joy. Your happiness is bound up with the happiness of Society. Your physical, mental and intellectual strength and skills have to be dedicated, not merely to your own progress, but equally to the progress of Society. You must try to benefit yourself and the Society through such service. Use the strength, skills, and spirit of service for such work. A machine gets rusted if it is not put to use; the human machine too gets rusted if it is not put to constant meaningful work. The pulse is not the correct indicator of your being alive; work and activity is the evidence and the value of real living. Your role is to translate your strength into activity along the path of duty. (Divine Discourse, 22 Jan 1982.)
நீங்கள் உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களின் சந்தோஷ, சௌகரியங்களை உங்களுடையதாகவே கருத வேண்டும்.அதன் பின்னரே, இந்தியாவோ அல்லது மற்ற எந்த நாடோ, சந்தோஷ, சௌகரியங்களுக்கு அருகதை உள்ளதாக ஆகும்.உங்களது சந்தோஷம் சமுதாயத்தின் சந்தோஷத்தோடு, பிணைக்கப் பட்ட ஒன்று.உங்களது உடல்,மனம், மற்றும் புத்தியின் வலிமை மற்றும் ஆற்றல்களை, உங்களது முன்னேற்றத்திற்காக மட்டும் அல்லாது, அதே அளவு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிக்க வேண்டும். இப்படிப் பட்ட சேவையின் மூலம் நீங்களும், சமுதாயமும் பலனடைவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். இப்படிப் பட்ட பணிக்கு, வலிமை, ஆற்றல்கள் மற்றும் சேவை மனப்பாங்கினைப் பயன் படுத்துங்கள்.ஒரு இயந்திரம் பயன்படுத்தப் படாமல் இருந்தால் துருப்பிடித்து விடுகிறது; மனிதன் எனும் இயந்திரமும் கூட, அர்த்தமுள்ள பணியில் இடையறாது ஈடுபடுத்தப்படா விட்டால், துருப்பிடித்து விடும்.நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கு இதயத் துடிப்பு ஒரு சரியான குறியளவு அல்ல; பணியும், செயலுமே உண்மையான வாழ்க்கைக்கான சான்றும், மதிப்பும் ஆகும். உங்களது திறனை கடமையின் பாதையில், பணியாக எடுத்துக் காட்டுவதே உங்களது பங்காகும்.