azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

What or who is God? When the answer to this question is sought, one discovers that God is the glory immanent in Nature. The earth rotates on its axis at a speed of thousand miles an hour. As a consequence, we have alternations of day and night, which helps us to live on this globe. Besides, it moves around the sun at the rate of 66,000 miles an hour, causing the seasons which bring rains for crops and vegetation which sustain human life. The earth does not profit in the least by these rotations but human beings survive, enjoy life and prosper on account of them. Nature must indeed be laughing at the sterile frenzies, the endless pursuits, and the countless miseries to which human beings submit themselves to, in their search for achieving the unachievable! You must search in Nature the sacred lessons it holds for you; then, you will understand how deep and how everlasting is the Truth that it conveys to you! (Divine Discourse, 22 Jan 1982)
இறைவன் என்றால் என்ன அல்லது யார்?இந்தக் கேள்விக்கு விடை காண முயலும்போது, இறைவன் என்பது இந்த இயற்கையில் பொதிந்துள்ள மகத்துவம் என்பதை ஒருவர் கண்டு கொள்கிறார்.இந்த பூமி தனது அச்சில், மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழலுகிறது.இதன் காரணமாக, இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு உதவும் இரவையும் , பகலையும் மாறி மாறிப் பெறுகிறோம்.இதைத் தவிர, பூமி ,சூரியனை மணிக்கு 66,000 மைல்கள் வேகத்தில் சுற்றி வருவதால், பருவங்கள் ஏற்பட்டு, மனித வாழ்க்கைக்கு ஆதாரமான பயிர்களுக்கும் தாவரங்களுக்கும் மழை பொழிகிறது.இந்தச் சுழற்சிகளினால், பூமிக்கு எந்த விதமான லாபமும் இல்லை ஆனால், மனிதர்கள் உயிர் வாழ்ந்து, வாழ்க்கையை அனுபவித்து, அவற்றினால் வளமை பெறுகிறார்கள். மனிதர்கள் சாதிக்க முடியாவற்றை சாதிப்பதற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொள்ளும் சாரமற்ற பரபரப்புக்களையும், முடிவே இல்லாத முயற்சிகளையும், கணக்கிலடங்காத துயரங்களையும் கண்டு இயற்கை உண்மையிலேயே எள்ளி நகையாடிக் கொண்டு தான் இருக்கும் ! உங்களுக்கான புனித பாடங்களை வைத்திருக்கும் இயற்கையில், நீங்கள் அவற்றைத் தேட வேண்டும்; பின்னரே, நீங்கள் அது போதிக்கும் சத்தியம், எவ்வளவு ஆழமானது மற்றும் ஸாஸ்வதமானது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.