azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna declares in the Bhagavad Gita, "There is nothing in the three worlds that I am obliged to do, nothing unaccomplished that I have to accomplish, but I am still engaged in activity (karma)”. Lord Krishna says this, for, if God is inactive, the Cosmos will come to a grinding halt. You too, must take the lead and follow it. Translate your strength into activity along the path of duty. The young follow the lead of elders. So elders must consistently hold on to ideals and work towards their realization so that the entire universe can attain prosperity and peace. Mother Earth teaches her children this lesson of service and sacrifice. Good conduct must be the main key to the life of every being. Remember, it is the 'way of living,' the path of virtue, that keeps you in the memory of people long after death. (Divine Discourse, 22 Jan 1982)
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில்,'' மூவுலகிலும் நான் செய்தே ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை ,சாதிக்கவில்லையே என்று சாதிக்க வேண்டுவதும் எதுவும் இல்லை,ஆனால்,நான் கர்மாவை செய்து கொண்டுதான் இருக்கிறேன் '' என்று அறிவிக்கிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதைச் சொல்கிறார், ஏனெனில், இறைவன் இயங்கவில்லை என்றால், இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக நின்று விடும்.நீங்களும் கூட இதைக் கையில் ஏந்தி, பின்பற்றியே ஆக வேண்டும்.கடமையின் பாதையில் உங்களது திறனை செயலாக வெளிப்படுத்துங்கள். இளைஞர்கள் முதியோர்களின் தலைமையைப் பின்பற்றுவார்கள்.எனவே, இந்த பிரபஞ்சம் அனைத்தும் சாந்தி , சௌகரியங்களைப் பெறும் பொருட்டு, முதியோர்கள் இடையறாது இலட்சியங்களைக் கடைப்பிடித்து, அவற்றை அடைவதை நோக்கிப் பாடுபட வேண்டும்.பூ மாதா தனது குழந்தைகளுக்கு, இந்த சேவை மற்றும் தியாகத்தின் பாடத்தைப் புகுட்டுகிறாள்.நன்னடத்தையே ஒவ்வொரு ஜீவராசியின் வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.'' வாழும் முறை'' அதாவது தார்மீகப் பாதையே,இறப்பிற்குப் பிறகும் வெகு காலம், மனிதர்களின் மனதில் நம்மை நிலை கொள்ள வைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.