azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you are pilgrims in the journey towards the city of liberation. Every life is but a stage in the journey, your body is a rest-house for a short stay during the pilgrimage. The mind is the caretaker in the place of our rest. Do not treat the Mind as a Master or Owner, but take care of it so that the house we are privileged to occupy is not damaged or polluted. We must treat the watchman politely and not destroy its interiors. A restless mind is an important source of ill-health. Many are constantly afflicted with some source of worry or other, never free from anxiety. Why? Because they are identifying themselves with the body! One acquires their body, through their past activities and deeds, caused by the twin pulls of love and hate. You can escape from this cycle, if you realize the Oneness of the Divine being present in you and in everyone. (Divine Discourse, 20 Nov 1982.)
நீங்கள் அனைவருமே, மோக்ஷம் எனும் நகரத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் யாத்ரீகர்களே.ஒவ்வொரு ஜன்மமும், இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிலையன்றி வேறில்லை; உங்களது உடல்,இந்த யாத்திரையில் நீங்கள் ஒரு சில காலம் தங்கி இருக்கும் சத்திரமாகும். மனம் நாம் தங்குமிடத்தின், காவற்பொருட்பாளர் போன்றது.மனதை எஜமானராகவோ அல்லது வீட்டுக்காரராகவோ நடத்தாதீர்கள்; ஆனால், நமக்கு தங்கும் சலுகை கிடைத்த வீடு சேதம் அல்லது மாசு அடையாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருங்கள். நாம் காவல்காரரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அதே சமயம் வீட்டின் உட்புறங்களை அழித்து விடக் கூடாது.சஞ்சலமுள்ள மனம் வியாதிகள் தோன்றுவதற்கான முக்கியமான மூல காரணம்.பலர் ஸதாஸர்வகாலமும் ஏதோ ஒரு கவலையால் பாதிக்கப் பட்டு,ஒரு போதும் மனக்கலக்கத்தில் இருந்து மீள்வதே இல்லை.எதனால்?ஏனெனில், அவர்கள் தங்களை , தங்களது உடலாகக் கருதுவதால் தான் ! விருப்பு, வெறுப்பு என்ற இரட்டை இழுப்புக்களின் காரணமாக அவர்கள் செய்த முந்தைய கர்மாக்களின் மூலம் ஒருவர் அவர்களது இந்த உடலைப் பெறுகிறார். உங்களுள்ளும், ஒவ்வொருவர் உள்ளும் உறையும் தெய்வீகம் ஒன்றே என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால்,இந்தச் சுழற்சியிலிருந்து ( பிறப்பு, இறப்பு) நீங்கள் தப்பித்து விடலாம்.